புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 15, 2022)

தீமையை விட்டு விலகு

நீதிமொழிகள் 3:7

நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.


சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகல பிராணி களையும் சிருஷ;டித்த பின்பு, ஆதிப் பெற்றோராகிய ஆதாமையும் ஏவா ளையும், ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். மனுஷனுக்கு ஏற்ற துணை யாக மிருகங்களையோ அல்லது வேறெந்த ஜீவ ஜந்துக்களையோ ஏற்படுத்தாமல், மனுஷியை ஏற் படுத்தினார். தேவனாகிய கர்த் தர் மனுஷனைப் பூமியின் மண் ணினாலே உருவாக்கி, ஜீவசுவா சத்தை அவன் நாசியிலே ஊதி னார், மனுஷன் ஜீவாத்துமாவா னான். எனவே உயிரினங்க ளைப் போல்லாது, தேவசாயலாகவே மனிதனை சிருஷ;டித்தார்;. தேவ னுடைய மகிமை அவர்கள்மேல் இருந்தது. சகல சிருஷிடிப்புக்களையும் ஆளும் படிக்கான அதிகாரத்தை மனுஷனுக்கு கொடுத்தார். அவர்களு க்கு சுயாதீனத்தை கொடுத்து. அவர்கள் பெற்றிருக்கும் அருமையான வாழ்வை காத்துக் கொள்ளும்படிக்கு, தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும், 'நன்மை தீமை' அறியத்தக்க விருட்சத்தின் கனி யைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில், நித்திய மரணத் திற்கு பங்காளியாவாய் என அவர்களை எச்சரித்திருந்தார். ஆனால், அவ ர்களோ, தாங்கள் கொண்டிருக்கும் தெய்வீக மேன்மையை மறந்து, தங்க ளுக்கு கொடுக்கப்பட்ட சுயாதீனத்தின்படி, பிசாசானவனுடைய சத்தத் திற்கு செவிகொடுத்து, தேவனுடைய சத்ததிற்கு கீழ்படியாமல், தேவன் எதை செய்ய வேண்டாம் என்று கட்டளையிட்டாரோ, அதை செய்யத் துணிந்தார்கள். அதனாலே, தாங்களே தங்கள்மேலும் தங்களுக்கு பின்வரும் மனித குலத்தின்மேலும் நித்திய மரணத்தின் சபாத்தை கொண்டு வந்தார்கள். பிரியமானவர்களே, மனிதன் எடுக்கும் ஒவ்வொரு தீர்மனாத்திற்குமே பின்விளைவுகள் உண்டு. எனவே அது நன்மையானதாக இரு க்கும்படி தேவ ஆலோசனைக்கு கீழ்படியுங்கள்.இன்றைய உலகிலே மனிதர்களுடைய சுயாதீனமானது பற்பல வடிவங்களிலே, கவர்ச்சியான பதங்களினாலே மெருகூட்டப்பட்டிருக்கின்றது. மனித உரிமை, பேச்சு சுத ந்திரம், நாட்டின் பிறப்புரிமை என்று அதன்படிக்கு: மனம் விரும்பியதை உண்ணலாம், குடிக்கலாம், உடுத்தலாம், பேசலாம், பார்க்கலாம், கேட்கலாம், செய்யலாம் என்று கூறுகின்றார்கள். நீங்களோ, உங்கள் சுய புத்தியின்மேல் சாயாமல், உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து நித்திய சமாதானத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

என் நினைவுகளை அறிந்த தேவனேஇ உம்முடைய வார்த்தை களை கேட்டு அதன்படி தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷ னைப் போல நான் வாழும்படிக்குஇ பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிந டத்த்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:24-27