புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 14, 2022)

உங்களுடைய தெரிவும் தீர்மானமும்

நீதிமொழிகள் 4:27

வலதுபுறமாவது இடதுபுறமா வது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக


'இது என்னுடைய வாழ்க்கை, உங்களுடைய வாழ்க்கையைப் போன் றது அல்ல. நீங்கள் சொல்லுவதால் நான் நம்ப வேண்டிய அவசியம் இல்லை, நான் என்னுடைய தீர்மானங்களை எடுக்க வேண்டும். நான் உங் களைப் போன்றவன் அல்ல. இந்த யுகமானது புதியது, உங்களுடைய காலத்தைப் போல அல்ல' என்ற வார்த்தைப் பிரயோகங்களை, இன்று நாம் மனிதர்கள் மத்தியிலே பரவலாக கேட்டிருக்கின்றோம். அவரவர் தங்கள் தங்கள் வாழ்க்கைக் குரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பது உண்மை. 'நான் ஜீவனையும் மரணத்தை யும், ஆசீர்வாதத்தையும் சாபத் தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தை யும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்;' என்று தேவனாகிய கர்த்தர் தாமே தம்முடைய ஜனங்களுக்கு கூறியிருக்கின்றார். எனவே, எதைத் தெரிந்து கொள்ளவதென்பது அவரவருடைய தீர்மானம். ஆனால், இன்று பலர், தேவனுடைய ஆலோசனைகளை தள்ளிவிட்டு, இந்த உலகத்தின் போக்கில் செல்லும் மனித ஆலோசனைகளையும், தத்துவங்களையும், கொள்கைகளையும் தெரிந்து கொள்கின்றார்கள். பெரும் நெருப்பு பற்றியெரியும் போது, ஒரு அனுபவமிக்க மனிதன், ஒரு இளைஞனை நோக்கி: மகனே, இது பெரும் நெருப்பு, அதற்கு கிட்டே போகாதே, அது உன்னை அவித்துப் போடும் என்று கூறினார். அதற்கு அந்த இளை ஞன், இது என்னுடைய வாழ்க்கை, நான் ஏன் நீங்கள் கூறுவதை நம்ப வேண்டும். நான் அதன் அருகே சென்று அதை தொட்டுப் பார்த்தபின்பு, என்னுடைய தீர்மானத்தை எடுத்துக் கொள்வேன் என்று பதில் கூறு வதைப் போல, மனிதர்கள், தங்கள் சொந்த தீர்மானத்தின்படி மரணத் தையும், சாபத்தையும் ருசிபார்த்த பின்பு நான் தீர்மானம் செய்வேன் என்று கூறுகின்றார்கள். ஆனால் தேவனோ, மனிதர்களை பார்த்து: நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவி கொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக. அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்று கூறியிருக்கின்றார். பிரியமானவர்களே, உங் கள் வாழ்க்கைக்கு நன்மை வழி எது? தீமையான வழி எது? என்று அறிந்து கொள்வதற்கு நீங்கள் தீமையான வழியிலே சென்று, அதன் கொடுமையை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. இதுவும் வேதம் கூறும் ஆலோசனை ஆனால் தெரிவும் தீர்மானமும் உங்களுடையதே.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, உம்முடைய வசனம் என் கால்க ளுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது என்ற உண் மையை உணர்ந்து கொள்ளும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 112:1-10