புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 13, 2022)

தளர்ந்து போய்விடாதிருங்கள்

1 பேதுரு 5:8

உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.


முற்காலங்களிலே, மனிதர்கள் தாங்கள் குடியிருக்கும் பட்டணத்தையும் அதன் குடிகளையும் பாதுகாக்கும் பொருட்டு, பட்டணத்தை சுற்றி பெரிதான மதில்களை கட்டி (அலங்கங்கள்), போக்குவரத்திற்காக மதில்க ளிலே சில வாசல்களையும் திறப்புக்களையும் வைத்து, அதற்கு கதவுகளை வைத்து, சுற்று மதில்களிலும், திறப்புக்களிலும் காவலர்களையும் வைத்து பட்டணத்தையும் அதன் குடிகளையும் பாதுகாத்துக் கொள்வார்கள். எதிரிகளோ, ஒவ்வொரு நாளும் உள்ளிடுவதற்கு முயற்சிப் பதில்லை. அசம்பாவிதங்களும் எப் போதும் நடப்பதில்லை. அதனால், சிலவேளைகளிலே காவ லாளிகள் சலிப்படைந்து, கடந்த வருடம் முழு வதும் எந்த எதிரியும் உள்ளிடுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தங்கள் பாதுகாப்பை சற்று தளர்த்தி தூங்கி விடுகின்றார் கள். ஆனால் எதிரியோ, நாள்தோறும் நோட்டம்விட்டு, பட்டணம் எங்கே திறந்திருக்கின்றது என்று ஆராய்ந்து, காவலாளிகள் சலிப்படைந்து, பாது காப்பை தளர்த்தும் நாளுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த நாளிலே அவர்கள் பட்டணத்திற்குள் தீடீரென்று ஆக்கிரமித்துவிடுவா ர்கள். பிரியமானவர்களே, வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்திருக்கும் போது, மழையும், குளிரும், வெப்பம், ஊரும் பிராணிகளும்; உள்ளே வருவதற்கு யாரும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. அவைகள் தன்னாரவாரமாகவே உள்ளிடும். அது போலவே, நம்முடைய மனதை நாம் திறந்து வைத்தால், அங்கே இந்த உலகத் திற்குரிய பல எண்ணங்களும் சிந்தனைகளும், உள்ளே வரும். அதை யாரும் யாருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. நாம் கோண லும் மாறுபாடான உலகத்திலே வாழ்ந்து வருகின்றோம். எனவே அந்த எண்ணங்களும், சிந்தனைகளும் அவை நம் இருதயத்திலே உலகத்தின் வித்துக்களை தூவிவிடும். அவைகள் வளர்ந்து, குறித்த காலத்திலே கசப்பான கனிகளை கொடுக்கும். பட்டணத்திற்குள் உள்ளிடும்படி இரவும் பகலும் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் எதிரியானவன், கொல்ல வும், அழிக்கவும், கொள்ளையிடவுமேயன்றி வேறொன்றுக்கும் வரான். அதுபோலவே, நம்முடைய மனதிலே உள்ளிடும் உலகத்தின் போக்கு களும் இருக்கின்றது. எனவே, சோரந்து போகாமலும், தளர்ந்து விட்டுவி டாமலும், விசுவாசத்திலே உறுதியாய் நிலைத்திருப்போமாக.

ஜெபம்:

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்த தேவனே, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கும்படி உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:10-18