புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 12, 2022)

தயை செய்யும் பரம தகப்பன்

சங்கீதம் 103:13

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர் த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.


ஒரு குடும்பத்தினர், விடுமுறை நாளொன்றிலே, உறவினருடைய விசேஷ வைபவமொன்றிலே கலந்து கொள்ளும்படிக்கு, வேறொரு ஊருக்கு செல்வதற்காக ஆயதப்பட்டுக்கொண்டிருந்தார்கள். மாலை நாங்கள் வீடு திரும்ப முன்பு மழை வரக்கூடிய சாத்தியக் கூறுகள் இரு க்கின்றது எனவே உன் அறையின் ஜன்னல் கதவை மூடுவதற்கு மறந்து போகாதே என்று தகப்பனானவர் தன் மகனிற்கு சில தடவைகள் ஞாபக ப்படுத்தியிருந்தார். அவனோ ஆம் செய்கின்றேன் என்று கூறிவிட்டு ஜன் னலை பூட்டுவதற்கு மறந்து போனான். வீட்டைவிட்டு வெளிக்கிடும் போது, திடீரென அவனுக்கு தன் தகப்பனா னவர் சொன்னது ஞாபகத்திற்கு வந் தது. ஆனாலும், பயணப்பட்டு போகும் பரபரப்பிலே, இந்த நாட்களில் என்ன மழை என்று அதை பொருட்படுத்தாமல் போய்விட்டான். இராத் திரியிலே அவர்கள் வீடு திரும்பிய போது, அன்று மத்தியான வேளை யிலே அடித்த புயலினால், ஜன்னல் வழியாக தண்ணீர் உள்ள வந்து, அவர்கள் வீட்டில் வெள்ளமாக ஓடியது. ஆதனால், அவர்களுக்கு பல பாதிப்புக்களும், பொருளாதார நஷ;டங்களும் ஏற்பட்டது. தகப்பனானவர் தன் மகனுடைய கவலையீனத்தை மிகவும் கடிந்து கொண்டு, சில நாட் கள் மனக் குழப்பத்துடன் இருந்தார். ஆனால், அவர் தன் மகனோடு என் றென்றைக்கும் கோபமாக இருப்பாரோ? மகனை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுவாரோ? வீட்டிலே ஏற்பட்ட பாதிப்புகளால் வீட்டை கைவிட்டு விடுவாரோ? அல்லது வீட்டை விற்று விடுவாரோ? இல்லை, அவர் அப் படியாகவொன்றையும் செய்யப் போவதில்லை. மகனானவன், தவறு செய்தது உண்மை ஆனால் மகனானவன் அதை உணர்ந்து, ஒரு பாட த்தை கற்றுக் கொண்டு, இனிமேல் பொறுப்புள்ளவனாக மாற வேண் டும் என்பதையே விரும்புவார். பிரியமானவர்களே, இந்தப் பூமியிலே நீங் கள் உயிரோடு வாழும்வரை, எந்தத் தவறுகள் வாழ்க்கையில் ஏற்பட்டா லும், குற்றம் செய்தேன், பாவம் செய்தேன் இனி எப்படி தேவ சமுகத் திற்கு செல்வேன் என்று பரம தந்தையாகிய நம் தேவனைவிட்டு ஓடிப் போகாதிருங்கள். குற்றங்களினாலே பாதிப்புக்களும் பின்விளைவுகளும் ஏற்பட்டிருக்கலாம், செய்த குற்றத்திலே தரித்து நிற்காமல், உண்மை யாக மனந் திரும்பி சிலுவையண்டைக்கு திரும்புங்கள். உங்கள் பெல னால் சரி செய்யக்கூடியவைகளை செய்யுங்கள். மிகுந்த கிருபை நிறை ந்த தேவ ன்தாமே எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்தென்றைக்கும் கோபங் கொண்டிரார். அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

ஜெபம்:

உருக்கமும்இ இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையு முள்ள தேவனே, உம்முடைய வார்;த்தைக்கு கீழ்படியாமல் அசட்டை செய்து வாழ்ந்த நாட்களிலும் நீர் என்மேல் பொறுயாய் இருந்ததிற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எரோமியா 31:3