புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 10, 2022)

சம்பாஷணைகளும் நல்லொழுக்கங்களும்

1 கொரிந்தியர் 15:33

மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.


காலையிலே கடைக்கு சென்று சமையலுக்கு மீன்களை வாங்கிக் கொண்டு திரும்பிய மனிதனானவன், வழியிலே தன் மோட்டார் வண்டியிலே வந்த பழைய நண்பனொருவனை அநேக வருடங்களுக்கு பின் சந்தித்தான். நண்பா வண்டியிலே ஏறிக் கொள் நான் உன்னை வீட்டிலே விடுகின்றேன் என்றான். இருவரும் இளம் பிரயாத்திலே நடந்த சம்பவ ங்களை பேசிக் கொண்டு சென்றார்கள். பழைய வாழ்க்கையின் நெறியற்ற செய்கைகளை இரை மீட்டிக் கொள்வதுபோல, பழைய கதைகளின் பரபரப்பில், நேரம் போனது தெரிய வில்லை. மதியவேளையானதால், வெய்யிலின் உஷ;ணம் அதிகமாகயிரு ந்தது. அந்த மனிதனானவன், தான் ஏன் கடைக்கு வந்தேன் என்பதையும், அவன் வாங்கிய பையிலே போட்ட மீன் களையும் பற்றியும் மறந்து போனான். சற்று நேரத்தில், பையிலேயிருந்து மீனானது நாறிப் போயிற்று. அதன் நாற்றத்தை நுகர்ந்த நண்பன், பையிலே என்ன இருக்கின்றது என்றான். அப்போதுதான் அந்த மனித னானவன் தன் தவறை உணர்ந்து கொண்டான். காலையிலே அவன் வரும்போது, அவன் மனதிலிருந்த நிம்மதியை தற்போது காணவி ல்லை. அந்த மீன் எப்படியாக வெய்யிலின் உஷ;ணத்தால் நாறிப்போ னதோ, அதே போல, அவன் மனமும் சொற்ப மதியீனமான பேச்சுக்க ளால் நாறிப்போயிற்று. செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைல த்தை நாறிக் கெட்டுப் போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர் பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும். பிரியமானவர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய வாழ்க்கையை எப்படி யாக வாழ்கின்றீர்கள் என்றும், எவைகளை தெரிந்து கொள்கின்றீர்கள் என்பதும் அவரவருடைய தனிப்பட்ட தீர்மானமாக இருக்கின்றது. நான் இதைப் பேசுவதில் என்ன தவறு? நான் அங்கே செல்வதில் என்ன குற்றம்? என்று மனிதர்கள் பல கேள்விகளை கேட்கலாம். அவைகளைக் குறித்து தங்கள் சொந்த அபிப்பிராயங்களை கூறிக் கொள்ளலாம். எல் லாவற்றையும் அனுபவிக்க மனிதனுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், கிறிஸ்துவின் சாயலிலே வளரும்படியான அழைப்பை பெற்ற நாம் ஒவ் வொருவரும் நமக்கு தகுதியானது என்வென்பதைக் குறித்து நாம் வேதத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பக்திவிருத்திக்கேதுவானவைகயே பேசுங்கள். அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக் கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்க ப்படுத்தாதிருங்கள்.

ஜெபம்:

என் இருதயத்தின் நினைவுகளை அறிந்த தேவனே, நான் என் வழிகளிளெல்லாம் உம்மைப் பற்றிக் கொண்டிருக்கவும், உமக்கு பிரியமி ல்லாத வார்த்தைகளை பேசாதபடிக்கும் உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:29-30