தியானம் (ஆடி 09, 2022)
வாய்மொழியின் கனி
நீதிமொழிகள் 18:21
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
நீதிமன்றத்தில், சாட்சிக்கூண்டில் நின்ற மனிதனானவனொருவன், வழக் கிலே நிற்கும் தன் நண்பனின் பொல்லாபை மூடி மறைக்கும்படிக்கு, பொயச்சாட்சியை, மற்றவர்கள் நம்பத்தக்கவிதமாக உண்மையைப் போல தன் நாவினாலே விவரித்துக்; கூறினான். அதனால் அவன் தன் நண்பனுக்கு உண்மையாய் இருக்கின்றேன் என்றும், அவனுக்கு உதவி செய்கின்றேன் என்றும் எண்ணிக் கொண்டான். ஆனால், அவன் தனக்கும் தன் நண்பனுக்கும் பொய் யான வாழ்க்கை வாழ்பவனும், தன் னையும் தன் நண்பனையும், இன் னும் அவனை சூழவுள்ளவர்களை யும் பொல்லாப்புக்கு நடத்துகின்ற வனாக இருக்கின்றான். நோயாளிக ளுக்கு மருத்துவ ஆலோசனையை கூறும் நல்ல மருத்தவர், தனக்கும் தன் வார்த்தைகளுக்கு செவி கொடு க்கின்றவர்களுக்கும் நன்மையுண்டாக பேசுகின்றார். தேவ நற்செய் தியை கலங்கமில்லாமல் எடுத்துப் போதிக்கும் போதகர், தனக்கும், அந்த நற்செய்தியை ஏற்றுக் கொள்கின்றவர்களுக்கும் ஜீவனுண்டாக போதிக்கின்றார். 'நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலி ருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டு கிறான். மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களு க்குச் சொல்லுகிறேன். ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்' என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். தூஷணமான வார்த்தைகளில் பிரியப்படுகின்ற மனிதனானவன், அவைகளையே தன் நாவினால் யாவரும் கேட்கும்படி பேசுகின்றான். அது அவனுடைய பொல்லாப்பின் கனி. கர்த்தருக்கு பயப்பிடுகின்ற ஞானவான், தன் இருதயமாகிய ஜீவ ஊற்றிலிருந்து, நன்மையானவைகளை பேசி, அவைகளினாலே திருப்தியடைகின்றான். மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும். தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவ னோ கலக்கமடைவான் (நீதி 13:2-3). பிரியமானவர்களே, தூய ஆவி யானவரின் துணையோடு, உங்கள் இருதயத்தை நல்ல பொக்கிஷ த்தால் நிறைத்து, நாவினாலே நற்செய்தியை அறிக்கையிடுங்கள்.
ஜெபம்:
உம்மை துதிக்கும் நாவை தந்த தேவனே, என் வாய்மொழிகள் ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்படிக்கு, என் இருதயமானது உம்முடைய ஜீவன் தரும் வார்த்தைகளால் நிறைந்திருப்பதாக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யாக்கோபு 3:5-10