புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 08, 2022)

பிரிவினைகளை உண்டுபண்ணும் அவயவங்கள்

ரோமர் 16:17

பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.


உங்களிடத்தில் பல நன்மைகளை பெற்ற அந்தக் குடும்பத்தினர் உங் களை பற்றி தூற்றி திரிகின்றார்கள். எனவே, அவர்களை குறித்து எச்சரி க்கையுள்ளவராக இருங்கள் என்று ஒரு மனிதனானவன், உடன் சகோத ரனிடம் கூறினார். அந்த சகோதரன் அந்த மனிதனை நோக்கி: எனக்கு எச்சரிக்கை கொடுக்கும் நீங்கள் அவர்களுக்குள் போக்கும்வரத்துமாக இருக்கின்றீர்களே, அது எப்படி என்று கேட்டான். அந்த மனிதன் மறு மொழியாக: தெரியாதா, அவர்கள் நம்முடைய உறவு முறையானவர் கள் என்றான். அதற்கு அந்த சகோ தரன்: அப்படியா, இப்போதுதானே, கையில் தொலைபேசி இருக்கின் றதே, நீங்கள் இருந்து கொள்ளு ங்கள், நாம் இருவரும், இப்போதே அவர்களை தொலைபேசி வழியாக அழைத்து அவர்களோடு பேசி, ஒப் புரவாகிக் கொள்வோம் என்றான். அதை கேட்டவுடனே, கோள்சொல்லி வந்த அந்த மனிதனின் முகபாவ னை மாற்றமடைந்து, பயம் உண்டாயிற்று. அந்த சகோதரன் அவரை நோக்கி: என்ன பதற்றம்? ஏன் பயப்பிடுகின்றீர்கள் என்று கேட்டான். அத ற்கு அந்த மனிதன் மறுமொழியாக: இல்லை, சகோதரனே, அப்படி பேசி னால், அவர்களோடு நான் கொண்டுள்ள உறவு உடைந்து போய் விடுமே என்றார். அதற்கு அந்த சகோதரன்: நீங்களும்; இப்போது அதே காரியத்தையே அல்லவா செய்தீர்கள்? எனக்கும் அந்த குடும்பத்தின ருக்குமிடையே பிரிவினையை உண்டாக்கும்படியான வார்த்தைகளை கூறினீர்கள் என்றார். பிரியமானவர்களே, சில வேளைகளிலே, குறைகள், குற்றங்கள், மனவருத்தங்கள் உறவுகளுக்கிடையே உண்டாவது தவிர் க்க முடியாதது. கிறிஸ்தவர்களாகிய நாம் ஒப்புரவாகும் எண்ணமுடை யவர்களாக இருக்க வேண்டும். ஒப்புரவாகுதலின் வாஞ்சை உள்ளத்தில் உண்மைiயாக இருக்கும் போது, தேவனாகிய கர்த்தர் அதை அவரு டைய நேரத்திலே வாய்க்கச் செய்வார். ஆனால்,. சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் தேவன் அருவருக்கும் ஏழு காரி யங் களில் ஒன்றாக இருக்கின்றது (நீதி 6:16-19) நீங்கள் பிரிவினைகளுக்கு உடந்தையாக மாறிவிடாமலும், உங்கள் மனதில் கசப்பான வித்துக் களை மற்றவர்கள் விதைப்பதற்கு இடம் கொடாமலும், ஒப்புரவா குதலு க்காக ஜெபிக்கின்றவர்களாயும், உங்களால் முடிந்தளவு சமாதானத்திற் கேதுவான கிரியைகளை நடப்பிக்கின்றவர்களுமாயிருங்கள்.

ஜெபம்:

நல்ல மேய்ப்பனாகிய தேவனே, ஆகாத சம்பாஷனைகளுக்கு செவி கொடுக்காமல், உம்முடைய சத்தத்திற்கு செவிகொடுக்கும் நல்ல ஆடுகளைப்போல உம்மை பின்பற்றி செல்ல கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 15:3