தியானம் (ஆடி 07, 2022)
வஞ்சிக்கப்படாதிருங்கள்
1 கொரிந்தியர் 12:20
அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
ஒரு ஊரிலே பெரிதான பண்ணையொன்றை நடத்தி வந்த மனிதனான வனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். இருவரும் பண்ணையின் வௌ;வேறு அலுவல்களை செய்து வந்தபோதும், அவர்கள் இருவரும் ஒருமித்து தங்களுடைய வேலைகளை செய்து வந்ததால், யாவும் சீராகவும் சிறப்பாகவும் இயங்கி வந்தது. அதைக் கண்டு எரிச்சலடைந்த அவர்களின் உறவினர்களிலொருவன், தந்தையானவர் பண்ணையலுவ ளாக வெளியூருக்கு சென்றிருந்ததை அறிந்து, தருணம் பார்த்து இளைய குமாரனை தனியாக அழைத்து பேசி னார். தம்பி, உன்னுடைய அப்பாவும் அண்ணாவும் எங்கே என்று கேட்டார். அதற்கு இளையவன்: அப்பா வெளியூருக்கு சென்றிருக்கின்றார், அண் ணன் பண்ணை அலுவல்களை கவனித்துக் கொண்டிருக்கின்றான் என் றான். அதற்கு உறவினர்: நான் நினைத்தது சரிதான், நீ பண்ணையின் பக்கம் போவதை உன் தந்தை விரும்புவதில்லை என்பது ஊரறிந்த உண்மை என்று கூறினார். அதற்கு இளையவன்: ஏன் அப்படி சொல்கின் றீர்கள் என கேட்டான். அதற்கு அந்த உறவினர்: நீ அநேக தாலாந்துகள் உள்ளவன் ஆனால் நான் உங்கள் குடும்ப விவகாரங்களுக்குள் வரவிரு ம்பவில்லை, நீயே அதை சிந்தித்து செயற்படு என்று கூறி சென்று விட்டார். அந்த உறவினர் இளையவனின் மனதிலே போட்ட தீமையான சிந்தனை அவனுக்குள் வேர்விட ஆரம்பித்தது. ஏன் நான்; பண்ணையின் அலுவல்களை கவனிக்க கூடாது? அண்ணனுக்கு மட்டும்தான் முடியுமோ என்று மனதிலே பெரும் குழப்பமடைந்தான். தந்தையார், ஊருக்கு திரும்பியதும், அவரை சந்தித்து, நீங்கள் ஏன் என்னை பண்ணையை விட்டு தள்ளி வைக்கின்றீர்கள்? இது உங்களுக்கு நியாயமாக தோன்றுகி ன்றதா என்று குழப்பத்தோடு கேட்டான். தன் மகனை யாரோ திட்டமிட்டு குழப்பியிருக்கின்றார்கள் என்று அறிந்து கொண்ட தந்தையார் இளைய வனை நோக்கி: நீயும் உன் அண்ணனும் சகோதரர்களாக இருந்தாலும் தனித்துமா னவர்கள். உன் அண்ணன் கொள்வனவு மற்றும் கணக்கு வழ க்குகளும்; செய்யும் ஆற்றல் குறைவு, அவைகளிலே நீ தேர்ச்சி பெற்ற வன். எனவே அண்ணனுக்கோ பண்ணையின் நாளாந்த விவகாரங்களை கவனித்து வருகின்றான். எம்மிடம் இருக்கும் பண்ணையை நீங்கள் இரு வரும் சேர்ந்தால் மட்டுமே சீராக நடபிக்க முடியும் என்று பதில் கூறி னார். பிரியமானவர்களே, இவ்வண்ணமாகவே தேவன் தமது சித்தத்தி ன்படி, அவயவங்களாகிய நம் ஒவ்வொருவரையும் சரீரமாகிய சபை யிலே வௌ;வேறு செயற்பாடுகளில் வைத்திருக்கின்றார். நாம் முறுமுறு க்காமல், ஒன்றுபட்டு செயற்பட்டால் மட்டுமே, தேவன் தந்திருக்கும் நிறைவை நாம் கண்டு கொள்ள முடியும்.
ஜெபம்:
பரலோக தேவனே, நாமே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்த னியே அவயவங்களாயுமிருக்கின்றோம் என்ற உண்மையை உணர்ந்து, தவறான சிந்தைகளுக்கு இடங்கொடுக்காமல் செயற்பட கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 12:5-8