புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 06, 2022)

ஒருமைப்பாட்டை காத்துக் கொள்ளுங்கள்

ரோமர் 15:6

நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.


ஒரு குறிப்பிட்ட நாட்டின் அரசனானவன், நாட்டின் விவகாரங்கள் யாவை யும் நீதியும் நியாயமுமாக நடத்தி வந்தான். நாட்டின் இயற்கையியல மைப்பின்;படி வடக்கிலே மூலவளங்கள் நிறைந்திருந்தாக இருந்தது. தெற்கிலே படைப்பல ஆற்றல்மிக்க ஜனங்கள் இருந்தார்கள். அதன்படி க்கு அரசனானவன், நாட்டின் வளங்கள் ஆற்றல்கள் அடிப்படையிலே ஜனங்களை வேலைக்கு அமர்த்தி, நாட்டை முன்னேற்றி வந்தான். குடி கள் மத்தியிலே ஒருமைப்பாடு நிலைத்திருந்ததால் நாடு பொரு ளாதார அபிவிருத்தியடைந்து, அதன் படைப்பலமும் பெருத்தி ருந்தது. அந்த நாட்டை முற்றுகை செய்து கைப்பற்றும்படிக்கு சில ராஜ்யங்கள் பலமுறை முயற்சி செய்தும், அவர்களுடைய முயற்சி முற்றிலும் தோல்வி கண்டது. அதனால், அந்த நாட்டை மேற்கொள்வ தற்கு, குடிகளின் ஒருமைப்பாட்டை உடைத்து, ஜனங்கள் மத்தியிலே பிரிவுகளை கொண்டு வரவேண்டும் என்று எதிரியான அந்நிய தேசத் தின் ராஜா சூழ்ச்சி செய்தான். அதன்படிக்கு, பாருங்கள் அரசனானவன், நாட்டின் வடக்கு பகுதியை அபிவிருத்தி செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றான். அதனால், தெற்கு பகுதி பின்னடையப் போகின்றது என்ற வதந்தியை ஜனங்கள் மத்தியிலே பரப்பும்படிக்கு சில ஒற்றவர்களை அந்த நாட்டிற்குள் அனுப்பி, ஜனங்கள் மத்தியிலே மனக் கசப்பையும் பிரிவினைகளையும் உண்டுபண்ணினான். அந்த எதிராளியாகிய ராஜா ஜனங்களின் மனதிலே விதைத்த விதை, முளை த்து வளர ஆரம்பித்து. சில ஆண்டுகளுக்கு பின், ஜனங்களுக்குள்ளே சில பிரிவுகள் ஏற்பட்டதால், ஒருமைப்பாடோடிருந்த அந்த நாட்டின் பெலன் குன்றிப் போக ஆரம்பித்தது. எதிரியின் நோக்கம் அந்த நாட் டிலே சிறிது சிறிதாக நிறைவேற தொடங்கியது. பிரியமானவர்களே, நம்முடைய எதிராளியாகிய பிசாசானவனும் இவ்வண்ணமாக, நம்மு டைய குடும்பத்திலே, சபையிலே, நம் உறவுகள் நட்புகள் மத்தியிலே செயற்படுகின்றான். அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவை கள் அல்லவே. (2 கொரி 2:11). பிசாசானவனின் ஆலோசனைகள் நம் மை கட்டியெழுப்புவதற்காக அல்ல, மாறாக நம் மனதிலே கசப்பான வித்தை விதைத்து, முடிவிலே வாழ்வின் சமாதானத்தை முற்றிலும் குலைத்துப் போடுவதே அவனுடைய நோக்கமாகும். அவன் கொல்ல வும், அழிக் கவுமேயன்றி வேறொன்றுக்கும் வரான் (யோவான் 10:10). எனவே அவ னுடைய தந்திரங்களை முறியடிக்கும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க த்தை தரித்தவர்களாக, விழிப்புடன் இருங்கள்.

ஜெபம்:

பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவனே, கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, ஏகசிந்தையுள்ளவர்க ளாயிருந்து, ஒருமனப்பட்டு உம்மை மகிமைப்படுத்த நீர் எங்களை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:11-18