புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 05, 2022)

அறிய வேண்டிய உண்மைகள்

1 யோவான் 4:4

ஏனெனில் உலகத்திலிரு க்கிறவனிலும் உங்களி லிருக்கிறவர் பெரியவர்.


நாம் நம்முடைய வாழ்க்கையிலே அடிக்கடி மறந்து போய்விடுவதும், தெளிவாக அறிய வேண்டிய இரண்டு உண்மைகளைக் குறித்து இன்று தியானம் செய்வோம். முதலாவதாக, நம்முடைய எதிரி யார் என்றும் அவன் எப்படிப் பட்டவனென்றும் நாம் அறிந்திருப்பது அவசியமானது. பொய்க்கு பிதாவும், வஞ்சிக்கின்றவ னும், வலுசர்ப்பமுமாகிய பிசாசான வனே நம்முடைய எதிரியாக இருக்கின் றான். அவனுடைய தந்திரங்கள் புதிதா னவைகள் அல்ல. தேவனாகிய கர்த்த ருடைய சித்தம் நம் வாழ்வில் நிறைவே றாமல் இருப்பதற்கு நம்மை வஞ்சிப்பதே அவனுடைய நோக்கமாக இருக்கின்றது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், தேவனுடைய வார்த்தைக்கு, நாம் கீழ்படியாமல் போவதற்குரிய வித்துக்களை நம் சிந்தைக்குள் அவன் போட்டுக் கொண்டே இருப்பான். அதனால் அவன் நம் மனதிலே பிரிவினைகளை உண்டு பண்ணுவான். குடும்பங்களிலே பிரிவினை, கணவன் மனைவிக்கிடை யிலே, சகோதரருக்கிடையிலே, நண்பர்களுக்கிடையிலே, சபை ஐக்கியங்களிலே இப்படியாக எல்லா இடங்களிலும் பிரிவினையின் வித்துக் களை விதைக்கும்படி சுற்றித் திரிகின்றான். அவைகளுக்கு இடங் கொடு க்கின்றவர்கள், தேவ சித்தம் தங்கள் வாழ்வில் நிறைவேறாமல் தடை செய்கின்ற வர்களாக இருக்கின்றார்கள். இரண்டாவதும், அதி முக்கிய மானதுமான உண்மையானது, இந்த உலகத்திலே இருக்கின்ற நம்மு டைய எதிரியைவிட நம்மோடிருக்கின்ற ஆண்டவர் இயேசு பெரியவராக இருக்கின்றார். வீட்டிலே, குடும்பங்களிலே, கணவன் மனைவிக்கிடையிலே, சகோதரருக்கிடையிலே, நண்பர்களுக்கிடையிலே, சபை ஐக்கியங்களிலே, வேலை செய்யும் இடங்களிலே, கல்வி நிலையங்களிலே, வெளியிடங்களிலே, ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், தேவனுடைய சித்தம் நம் வாழ்வில் நிறைவேறும்படிக்கு, நாம் நடக்க வேண்டிய வழியை நமக்கு போதித்து, நாம் அதிலே நடப்பதற்கு நம்மோடு கூட வருகின்றார். தங்கள் மனதை கடினப்படுத்திக் கொள்ளாமல் அவரு டைய சத்ததை கேட்டு, அதன்படி நடக்கின்றவர்களின் வாழ்விலே தேவ சித்தம் நிறைவேறும். பிரியமானவர்களே, ஆதாம் ஏவாள் தேவனாலே உருவாக்கப்பட்டது போல, நீங்களும் கிறிஸ்து இயேசு வழியாக தேவ னுடைய பிள்ளைகளாகும்படி மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கின்றீர்கள். சோதனையின் நாளிலே, உங்களில் இருப்பவர் பெரியவர், அவரே உலகத்தை ஜெயித்த இயேசு கிறிஸ்து என்பதை மறந்து விடாமல், அவருடைய சத்தத்திற்கு கவனமாக செவி கொடுங்கள்.

ஜெபம்:

வெள்ளம்போல் சத்துரு வரும்போதுஇ அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றும் தேவனாகிய கர்த்தாவேஇ நான் எப்போதும் சத்தியபரராகிய இயேசுவையே சார்ந்து வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:6-10