புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 04, 2022)

நாம் பெற்ற தேவ கிருபை

தீத்து 3:2

பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.


யுத்தத்தினாலே பாதிக்கப்பட்ட தேசமொன்றின் ஜனங்கள் வாழ்வாதார த்தை இழந்து, நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுப் போனார்கள். ஒரு குறிப்பிட்ட நாட்டின் அராசாங்காமானது நல் மனதுடன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகள் ஏதும் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிளாக தங்கள் நாட்டில் குடிநுழையும்படி தயவ காட்டியது மட்டுமல்லாமல், தங்கள் நாட்டின் குடியுரிமையை அவர்க ளும் பெற்றுக் கொள்ளக் கூடிய வழி முறைகளையும் அமைத்துக்; கொடுத்தார்கள். பல ஆண்டுகள் சென்ற பின் னர், வேறறொரு தேசத்திலே இயற் கை அனர்த்தத்தினாலே பேரழிவு உண் டாயிற்று. அதனால், அந்த தேசத்தி லுள்ள குடிகளுக்கும், தஞ்சம் வழங்கும்படி மேலே குறிப்பிடப்பட்ட நாட் டின் அரசாங்கம் தயது காட்டியது. பல ஆண்டுளுக்கு முன்பு, நிர்கதியான நிலையிலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த ஜனங்களில் சிலர், வேறொரு தேசத்திலிருந்தும் அகதி கள் நாட்டிற்குள் வரப்போகின்றார்கள் என்று அறிந்த போது, 'அந்த தேசத்தார் பொல்லாதவர்கள் அல்லவோ? அவர்களுக்கும் நம் நாட்டில் தஞ்சமா?' என்று முறையீடு செய்தார்கள். குறித்த நாட்டின் பிரதிநிதி ஜனங்களை நோக்கி: அன்று நிர்கதியாக இருந்த உங்களுக்கும், இன்று பாதிக்கப்பட்டிருக்கின்ற இந்த மக்களுக்கும் பாரபட்சமுமின்றி நாம் நம் நாட்டின் கதவை திறந்து, நம் நாட்டின் நன்மையை பெற்றுக் கொள்ளு ம்படி வாய்ப்புக் கொடுக்கின்றோம். தங்கள் வழிகளை மாற்றி, நம்மு டைய நாட்டின் வழிமுறைகளுக்கு தங்களை ஒப்புக் கொடுக்கின்றவர் கள் யாவரும், குடியுரிமையை பெற்றுக் கொள்ளுவதற்கு இங்கு தடையேதுமில்லை. ஆனால், தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை துஷ்பிரயோகம் செய்தின்றவர்கள் நாட்டின் சட்டத்தின்படி குறித்த காலத்திலே நியாயந்தீர்க்கப்பட்டு அதற்குரிய தண்டனையை பெற்றுக் கொள்வார் கள் என்று கூறினார். பிரியமானவர்களே, இவ்வண்ணமாகவே, ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்று ஆண்டவராகிய இயேசு பரலோகத்தின் வாசலை யாவருக்கும் திறந்திரு க்கின்றார். இது நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயவும் மனுஷர்மேலுள்ள அவருடைய அன்புமாயிருக்கின்றது எனவே எமக்காக பரிதவிக்க்கூடிய தேவ குமாரனையும், அவரால் நமக்குண்டான தேவ தயவையும் மறந்து போகாமல், மற்றவர்களும் அதை ருசிபார்க்க வேண் டும் என்னும் எண்ணமுடையவர்களாக நாம் இருக்க வேண்டும்.

ஜெபம்:

யாவர் மேலும் கிருபையை பொழிகின்ற தேவனேஇ நீர் எம்மேல் காட்டிய தயவும் அன்பும்இ மற்றவர்கள்மேலும் பிரசன்னமாக வேண்டும் என்ற உணர்வு எப்போதும் என்னில் இருக்கும்படி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - தீத்து 3:1-7