புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 03, 2022)

சர்வ வல்லவர் முன்குறித்திருக்கின்றார்

ஏசாயா 41:12

உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.


கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஒரு சிறிய ஊர் இருந்தது. அந் நாட்களிலே, அந்த ஊரைப் பற்றி பேசுகையில், 'நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா' என்று ஜனங்கள் தரக்குறைவாக கூறுவது வழக்கச் சொல்லாக இருந்தது. அந்த ஊரானது புறக்கணிக்க ப்பட்டதும், கல்விமான்கள், மத குரு க்கள், குடிமக்களால் அற்பமாக எண் ணபட்டதுமாக இருந்தது. ஆனால் வானத்தையும் பூமியையும் உண்டா க்கிய கர்த்தர், அவருடைய அநாதி தீர்மானத்தின்படி 'நாசரேயன்' என்று அழைக்க்ப்படும்டிக்கு, அவர் நாசரே த்திலே வாழ்ந்து வந்தார். நாசரேத் திலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழு ம்புவதில்லை என்று, பலர் ஆண்ட வராகிய இயேசுவையும் புறகணித் தார்கள். , அவரையும் அவர் வளர்ந்த இடத்தையும் கேலி செய்தார்கள். ஆனால் ஆண்டவராகிய இயேசு தெரிந்து கொண்ட இடத்தை ஒருவன் புறக்கணித்தால், அதனால் யாருக்கு நஷ;டம்? சர்வ வல்லமையுள்ள தேவன் நிர்ணெயம் பண்ணினதை யார் தள்ளிப்போட முடியும்? ஒருவரா லும் கூடாது. பிரியமானவர்களே, உங்கள் பூர்வீகம் எதுவாக இருந்தா லும், உலகம் உங்களுக்கு தரும் பெயர் எப்படிப்பட்டதாக இருந்தாலும், நீங்களும் சர்வ வல்லமையுள்ள தேவனாலே தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாக இருக்கின்றீர்கள்;. அதை யாராலும் இழிவு படுத்த முடியாது. சர்வ வல்லமையுள்ளவர் தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை நோக்கி: பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன். நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகை யாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகா யம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்கு வேன். இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சை யடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில் லாமற்போவார்கள். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கி றேன் என்று சொல்லுகிறேன் என்றார். எனவே, உலக தராதரங்களை நோக்கிப் பாராமல், உங்களை முன்குறித்து அழைத்த சர்வ வல்லமை யுள்ள தேவனின் பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

ஜெபம்:

நீ பயப்படாதே, நான் உன்னுடனே கூட இருக்கிறேன்; என்று வாக்குரைத்த தேவனே, எக்காலத்திலும் நான் உம் வார்த்தையிலே நிலைத்திருக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:4-5