புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 02, 2022)

நெருக்கப்படுகிறவனுடைய திடன்

ஏசாயா 25:4

நீர் ஏழைக்குப் பெலனும், நெருக் கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத்தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.


இவன் யார் என்று எனக்குத் தெரியும். ஊர் குருவி உயரே பறந்தாலும் பருந்தாகுமா? இவன் உயர்வடைய முடியுமோ? என்று அயலிலே வசித்து வந்த ஒரு மனிதனானவனின் முன்னேற்றத்தை கண்டு கொண்ட சிலர் அவனைக்குறித்து இவ்வண் ணமாக பேசிக் கொண்டார்கள். இது இந்த உலகத்திலுள்ள மனி தர்களுடைய எண்ணங்களும் கொள்கை கோட்பா டுகளுமா யிருக்கின்றது. ஆகார் என்னும் ஒரு அடிமை பெண் தன் பிள் ளையுடன் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். அவளிட மிருந்த துருத்தியிலிருந்த தண் ணீர் செலவழிந்த பின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு, தன் பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகா ரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள். பிரியமானவர்ளே,இந்த உலகமா னது எஜமானானவனுக்கு ஒரு நீதி, அடிமையானவனுக்கு இன்னுமொரு நீதி. ஐசுவரியவானுக்கு முன்னிரிமையைக் கொடுத்து, ஏழைகளையோ ஒடுக்கின்றார்கள். நம்முடைய தேவனாகிய கர்;த்தர், இந்த உலகம் உங் களை பார்க்கின்ற பிரகாரமாக பார்ப்பதில்லை. சிறுமையும் எளிமையுமா னவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாக த்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடு த்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிரு ப்பேன். உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வற ண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்கி, வனாந்தரத்திலே கேதுருமரங்களை யும், சீத்திம் மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்க ளை யும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாரு விருட்சங்களையும், பாய்மர விருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன். கர்த்த ருடைய கரம் அதைச் செய்தது என்றும், இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், யாவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்.

ஜெபம்:

உன்னதத்திலே வாசம் செய்யும் தேவனே, சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்தும்படி அற்பமான எம்மை கண்ணோக்கி பார்க்கின்ற உம்முடைய தயவிற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 113:1-9