தியானம் (ஆடி 01, 2022)
நீர்ப்பாய்ச்சலான தோட்டம்
ஏசாயா 58:11
நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
வறட்சியான காலத்திலே, அடுத்த ஊருக்கு கால்நடையாக சென்று கொண்டிருந்த வயதானவர், அவர் போகும் பாதையிலே, நிழலுக்காக ஒதுங்கு வதற்கோ, தாகம் பசியை தீர்த்துக் கொள்வதற்கோ கண்களு க்கு எட்டிய தூரத்திலே எந்த இடமும் அவருக்கு தெரியாதிருந்தது. சற்று தூரம் சென்றதும், காய்த்து குழுங்கும், மரங்களைக் கொண்ட சோலை போன்ற ஒரு சிறுதோட்ட த்தை அவர் கண்டு, அங்கே சென்று ஒரு மரத்தின் நிழலிலே ஒதுங்கினார். அந்த தோட்டத்தை வைத்திருந்த வீட் டார், அந்த வயதானவருக்கு, தாக த் திற்கு இளனியையும் பசியை ஆற்று வதற்கு மரத்திலே இருந்த பழங்க ளையும் பிடுங்கிக் கொடுத்து, அவரு டைய களைப்பை ஆற்றினார்கள். தன் பயணத்தை மறுபடியும் தொடரு வதற்கு முன்பு, அந்த வயதானவர், அந்த வீட்டாருடைய விருந்தோம்ப லைக் குறித்து ஆச்சரியப்பட்டார். வீட்டுக்காரன் அந்த வயதானவரை நோக்கி: ஐயா, என்ன ஆச்சரியமாக பார்க்கின்றீர்கள் என்றான்? அதற்கு அவர்: தம்பி, இந்த வறட்சியான நாளிலே, இப்படிப்பட்ட ஒரு சோலையை காண்பது அரிது. ஆனால் ஊர் பெயரறியாத, அற்பமான இந்த அந்நிய னுக்கும் இளைபாறுதல் தருவதற்கு உங்கள் உள்ளம் வளமிக்க சோலை யைப் போலவே இருக்கின்றதை நினைக்கும் போது ஆச்சரியமாக இரு க்கின்றது என அவர்களுக்கு தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்து, உங்கள் மனம் எப்போதும் வற்றாத நீருற்றைப் போலவும், வளமிக்க தோட்டத்தைப் போலவும் இருக்கட்டும் என்று வாழ்த்துதலைக் கூறி தன் பயணத்தை தொடர்ந்தார். பிரியமானவர்களே, ஒருவன் தன் இருதய த்தை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ளும் போதோ அதினிடத்தி னின்று ஜீவஊற்று புறப்படும். இரவும் பகலும் வேதத்தை தியானித்து அதன்படி தன் வழியை காத்துக் கொள்கின்றான். வேதமே அவனுடைய வெளிச்சம். தேவனுடைய திவ்விய ஆசீர்வாதம் அவன்மேல் இருப்ப தால், பசியுள்ளவனுக்கு ஆகாரமும், தனக்கு இருப்பதில் பகிர்ந்துகொடு க்கும் உள்ளமும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த் துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ் திரங் கொடுக்கிறதும் அவனுடைய மனத்திருப்தியாயிருக்கும். இந்த ஆசீ ர்வாதம், கையிருப்புக்களினால் உண்டாகுவதில்லை. பொருளாதார செழி ப்பும் இவைகளை கொடுப்பதில்லை. கர்த்தருக்குப் பயந்து அவரு டைய வழியிலே நடக்கின்ற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.
ஜெபம்:
நித்தமும் என்னை நடத்தும் தேவனாகிய கர்த்தாவே, வாழ்க்கை மகா வறட்சியான நாட்களைப் போலிருந்தாலும், உம் வார்த்தையால் என் ஆத்துமாவைத் திருப்தியாக்கி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 128:1-6