தியானம் (ஆனி 30, 2022)
நீங்கள் யாரைச் சார்ந்தவர்கள்?
1 கொரிந்தியர் 3:7
அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.
ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திலே இருந்த நாட்களிலே, சிறப்பு குழுவினரான (Elite Group) மதத் தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் தாங்கள் ஆபிகாமின் சந்ததியென்றும், மோசேயை சார்ந்தவர்களென்றும் கூறி, ஆபிரகாம், மோசேயை படைத்தவரையோ அற்பாக எண்ணி, அவ ரை தள்ளிவிட்டார்கள். தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுப்ப தைப் பார்க்கிலும், இவர்கள் தாங்கள் சிறப்புக் குழுவிலே அங்கத்தவர்களாக இருப்பதையே மேன்மை என எண்ணி னார்கள். பின்பு, ஆதி அப்போஸ்தலர் சபையிலே, ஜனங்களுக்குள்ளே இரு ந்த சிலர், தங்களுக்குள்ளே பிரிவினை ஏற் படுத்தி, சிலர் தாங்கள் பவுல் என் னும் ஊழியரை சேர்ந்தவர்கள் என்றும், வேறு சிலர் அப்பொல்லோவைச் சேர்ந் தவர்கள் என்றும், இன்னும் சிலர் தாங் கள் பிரதான சீஷனாகிய பேதுவை சேர்ந்தவர்கள் என்றும் மேன்மை பாராட்டினார்கள். இவர்களும், ஆண் டவர் இயேசுவோடு ஐக்கியமாயிருப்பதைவிட, அவருடைய ஊழியக் காரர்களோடு ஐக்கியப்பட்டிருப்பதை மேன்மையாக எண்ணினார்கள். இவ் வண்ணமாக இன்றும் சில மனிதர்கள், தங்கள் சபைகளின் பெய ரை கூறுவதிலும், தங்கள் ஊழியரின் பெயரை சொல்வதிலும் மேன் மைய டைகின்றார்கள். அதாவது, அவைகளினாலே தாங்கள் சிறப்பு குழு வினர் (நுடவைந புசழரி) என்று எண்ணிக் கொள்கின்றார்கள். பிரியமானவர் களே, ஒரு வேளை நீங்கள் குக்கிராமத்திலுள்ள எளிமையான குடி சையிலே அமைந்திருக் கும் ஆலயத்திலே, யாரும் பெயர் அறியாத போதகரின் வழிநடத்துத லோடு, ஒரு சில விசுவாசிகளோடு, தேவாதி தேவனை ஆராதித்து வரலாம் அல்லது உலக பிரசித்தி பெற்ற இடாம்பீ கரமான கட்டிடத்திலே, பிரபல்யாமான போதகரின் வழிநடத்தலோடு, பல்லாயிரக் கணக்கான விசுவாசிகளோடு தேவாதி தேவனை சேவித்து வரலாம். நாம் செல்லும் சபை ஐக்கியத்தை நேசிக்க வேண்டும், ஊழியர் களை கனப்படுத்த வேண்டும். ஆனால் எவை எப்படியாக இரு ந்தாலும், நம்முடைய வாழ்க்கையானது தேவ வார்த்தைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். நம்முடைய ஐக்கியம் ஆண்டவராகிய இயேசுவோடு இருக்க வேண்டும். இந்த உலகத்திலே நாம் எதைக் குறித்து பெருமை பாராட்ட முடியும்? தேவனுடைய கிருபையை குறி த்தும், மீட்பர் இயேசுவின் சிலுவையைக் குறித்துமேயன்றி வேறொன் றுமில்லை. நாம் மேன்மைபாராட்டக்கூடிய வேறுபிரிக்கப்பட்ட குழுவே.
ஜெபம்:
என்னை நேசிக்கின்ற தேவனே, நீரே என் வாழ்வின் மேன்மை. எப்போதும் என் இருதயம் உம்மோடு ஐக்கியமாக இருக்கவும், உம்மு டைய வார்த்தைக்கு நான் கீழ்படிந்து வாழவும் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 யோவான் 1:3