புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 29, 2022)

ஏற்ற வேளை வரும்வரை...

1 பேதுரு 5:6

ஆகையால், ஏற்றகாலத் திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.


யோசேப்பு என்ற வாலிபன், தன் சகோதரர்களால் புறக்கணிப்பப்பட்டு, அந் நிய தேசத்திலே அடிமையாக கொண்டு போகப்பட்டான். அவனுக்கு பல உபத்திரவங்கள் ஏற்பட்டது. அவன் செய்யாத குற்றத்திற்காக அவனை சிறையிலே போட்டார்கள். வேளை வந்தபோது, தேவனாகிய கர்த்தர், யோசேப்பின் கையை ஒங்கச் செய்து, எகிப்தின் ராஜாவிற்கு அடுத்த ஸ்தானத்திற்கு அவனை உயர் த்தினார். தேவனால் தெரிந்து கொள்ள ப்பட்ட மோசே என்னும் மனிதனான வன், இளமைக் காலத்திலே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனினால், தனக்கு பொல்லாப்பு நேரிடும் என்று எகிப்திலே அடிமைகளாக இருந்த தன் ஜனங்க ளைவிட்டு தூர தேசத்திற்கு ஓடிப்போ னான். அங்கே 40 வருடங்கள் சஞ்சரி த்தான்.வேளை வந்த போது, தேவனாகிய கர்த்தர் அவனை சந்தித்தார். தம்முடைய ஜனங்களை அடிமைத் தனத்திலிருந்து வழிநடத்தும் இரட்ச கனாக மோசையை ஏற்படுத்தினார். குழந்தை பருவத்திலேயே, ஆலயத் திலிலே இருந்து வளர்ந்த சாமுவேல் என்னும் பிள்ளையாண்டனின், சூழ்நிலைகள் நன்மைக்குரியதாக இருக்கவில்லை. அக்காலத்திலே ஆசா ரியனாக இருந்த ஏலி என்பவரின் புத்திரர்கள் ஆலயத்தின் வாசைனயைக் கெடுக்கும் துன்மார்க்கராக இருந்தார்கள். அதன் மத்தியிலும், தேவனா கிய கர்த்தர், சாமுவேலை உயர்த்தி, தேசத்தின் நியாயாதிபதியாக உய ர்த்தினார். தகப்பனின் கொஞ்ச ஆடுகளை மேய்த்து வந்த இளைஞனா கிய தாவீது, செய்யாத குற்றத்திற்காக தேசத்திலிருந்து துரத்திவிடப் பட்டு, கெபிகளிலும், மலைகளிலும், காடுகளிலும் வனாந்திரத்திலும் சஞ் சரித்து வந்தான். கர்த்தருடைய வேளை வந்த போது, கர்த்தர் அவனை உயர்த்தி, சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாக்கினார். பிரியமானவ ர்களே, கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் முன் குறித்த காரியங்களை எவருமே தடுத்து நிறுத்த முடியாது. உங்கள் குடும்பத்தினரோ, நண்ப ர்களோ, உறவினர்களோ, பாடசாலையிலுள்ளவர்களோ, வேலை செய்கி ன்றவர்களோ அல்லது ஒரு வேளை ஆலயத்திலுள்ள சில மனிதர் களோ, யாராக இருந்தாலும், கர்த்தருடைய சித்தத்தை மாற்ற முடியாது. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து பொறுமையாக இருங்கள். நீங்கள் கடையான திசைமட்டும் துரத்துண்டு, ஒடுக்கப்பட்டு இருந்தா லும், கர்த்தர் குறித்த வேளை வரும் போது, அவர் துரிதமாக வந்து, தடை களை உடைத்து உங்களுக்கென முன் குறித்தவைகளை நிறைவேற்றுவார்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்முடைய சித்தத்திற்கு விரோதமாக ஒருவருமே எதிர்த்து நிற்க முடியாது. உம்முடைய வேளை வரும்வரை நான் உம் வார்த்தைக்கு கீழ்படிந்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோபு 42:2