புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 28, 2022)

மனம் புதிதாக்கப்படட்டும்

ரோமர் 12:2

உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.


ஒரு தகப்பனானவன், தன் மகனை பட்டணத்திலுள்ள இன்னுமொரு சிறப்பு குடிகள் (Elite Citizen) படிக்கும் பாடசாலையிலே சேர்ப்பதற்காக, தற்போது கல்வி கற்றுக் கொண்டிருக்கும் பாடசாலையிலே இருந்து வில க்கி அதற்குரிய பத்திரங்களை பெறும்படிக்கு அதிபரை சந்திக்க சென் றிருந்தார். அதிபர் தகப்பனானவனை நோக்கி: உங்கள் மகனுடைய கல்வி தராதரம் நன்றாக இல்லை, இந்த நிலையிலே ஏன இப்படி செய்கின்றீர்கள் எனக் கேட்டார். அத ற்கு தகப்பனானவர்: அவன் படிப்ப தற்கு, இங்குள்ள சுற்றாடல் அவனு க்கு சரியில்லை. கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களைக் குறித்த திரு ப்தி எங்களுக்கு இல்லை. அதனால் நாங்கள் அவனை வேறுபாடசா லையிலே சேர்க்கப் போகின்றோம் என்றார்கள். அதற்கு அதிபர்: இந்த நாட்டின் கல்வி அமைச்சின் தராதரத்தின்படி இந்த பாடசாலையானது கடந்த பத்து வருடங்களாக, சராசரி பாடசாலைகளைவிட அதி உயர் வாகவே தரப்படுத்தப்பட்டுள்ளது. புள்ளி விவரவியலின்படிக்கு, இந்த பாட சாலையிலே கற்றவர்களில் அதிகபடியானோர் மேற்படிபுக்கு கடந்து சென்று, நல்ல உத்தியோகங்களிலே இருக்கின்றார்கள். காரியம் அப்ப டியாக இருக்கும் போது, நீங்கள் கூறும் கருத்து ஒவ்வவில்லையே. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவனுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களின் தேர்ச்சி அறிக்கையின்படி, உங்கள் மகனானவன், கற்றுக் கொடுக்கும் பாடங்களில் கவனம் செலுத்துவதில்லை, வீட்டு வேலைகளை செய்வ தில்லை, ஆசிரியர்களின் சொல்லை கேட்பதில்லை. இவையாவும் ஒரு மாணவன் எங்கு படிக்கச் சென்றாலும் அடிப்படையானவைகள். நீங்கள் உங்களது மகனை உங்கள் விருப்பப்படி எங்கும் சேர்த்துக் கொள்ள லாம். ஆனாலும், அவன் செல்லும் இடத்தில் அவனுடைய சுபாவங்களை மாற்று வதற்குரிய வழிகளை செய்து கொடுங்கள் என்றார். பிரியமானவ ர்களே, இன்று சிலர், பற்பல காரணங்களை முன் வைத்து, ஒரு ஆல யத்தைவிட்டு இன்னுமொரு ஆலயத்திற்கு செல்கின்றார்கள். அது ஒவ் வொருவரின் தனிப்பட்ட தீர்மானம். சில மாற்றங்கள் அவசியமானவை களாக இருக்கலாம். ஒருவேளை தேவ சித்தமாகக்கூட இருக்கலதம். எது சரி, எது பிழையென்பதை தேவனொருவரே அறிவார். அவர் ஒரு வரே நீதியுள்ள நியாயாதிபதி. ஆனால், தேவ வார்த்தைகளின்படி நான் மாற வேண்டும் என்ற மனநிலையற்றவனாக வாழ்ந்து கொண்டு, மற்றவ ர்களை குற்றப்படுத்தி, இடத்தை மாற்றிக் கொள்வதால், தேவனுடைய வார்த்தை மாறிப் போகப்போவதில்லை. நீங்கள் எங்கு சென்றாலும் உள்ளான மனு ஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்பட வேண்டும். தேவ வார்த்தை யின்படி வாழ்க்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, உம்மை வருத்தும் வழியிலே நான் நடந்தால் என்னை நீர் உணர்வுள்ளவனாக்கி, உம்மு டைய வார்த்தைக்கு கீழ்படிக்கின்றவனா(ளா)க என்னை மாற்றுவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:16