புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 27, 2022)

தீமைகளுக்கு விலகியிருங்கள்

எரேமியா 2:13

ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட் டிக்கொண்டார்கள்.


நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன? என்று தேவனாகிய கர்த்தர்தாமே ஏரேமியா என் னும் தேவ ஊழியருடைய நாட்களிலே, தம்முடைய ஜனங்கள் இரண்டு தீமைகளை செய்தார்கள் என்று அவர்கள் நிலைமையை அவர்களுக்கு சுட்டிக்காட்டினார். அதுமட்டுமல்லா மல், அவர்கள் அந்த நிலைமைக்கு போவதற்கு காரணங்கள் என்ன என் பதையும் விளக்கிக் கூறினார். கர்த் தர் சுட்டிக்காட்டிய காரியங்களில் சிலவற்றைஇன்று நாம் தியானத் திற்கு எடுத்துக் கொள்வோம். கால ங்கள் மாறி, நாகரீகமான நவீன தொழிநுட்பம் வளர்ச்சியடைந்து, மனிதனுடைய விஞ்ஞான அறிவு அதிகரித்திருந்தாலும், பாவங்களின் அடிப்படை காரணிகள் ஆதியிலிரு ந்து முடிவு வரைக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. எனவே அவை கள் நம்முடைய வாழ்விலே இருக்கின்றதா என்று ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். அத்தோடு அவைகள் தந்திரமாக நம்முடைய வாழ் க்கையிலே நுழையாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண் டும். முதலாவதாக: 1. அந்நிய வழிபாட்டு முறைமைகள்: இன்று மனி தர்கள் அன்பு என்ற போர்வையிலே, பெருந்த ன்மை படைத்தவர்களாக, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி தேவன் கொடுத்த பரிசுத்த வாழ்வை தீட்டுப் படுத்துகின்றார்கள். அதனால், இவர்கள் மார்க்கம் தப்பி, தாறுமாறான வாழ்க்கை க்கு தங்களை ஒப்புக் கொடுக்கின்றார்கள். 2. பழைய சுபாவத்தின் மாம்ச இச்சைகள்: சிலர், விட்டுவந்த பழைய வாழ்க்கையின் மோச ம்போக்கும் இச்சைகளை, தூரத்திலேயே இருந்து நுகர்ந்து, அதிலே தங்கள் ஆர்வத்தை செலுத்துகின்றவர்கள். 3. அந்நிய நுகத்திலே பிணைக்கப்படுதல்: தேவன் சமாதானத்தின் பாதரட்சையை கொடுத்து, நன்மையினால் வாயை திருபதியாக்கியிருக்க, நான் அந்நியரை நேசிக்கின்றேன் என்று சமரசம் பேசுகின்றவர்கள்;. இவர்கள் தங்கள் சமாதானத்தை இழந்து, தாகத்தால் வறண்டு போகின்றார்கள். பிரியமானவர்களே, நீங்கள் கற் றுக் கொண்ட கொள்கைகளில் தரித்து நிற்காமல், வேதத்தை தினமும் வாசித்து தியானியுங்கள், தினமும் ஊக்கமாய் ஜெபம் செய்யுங்கள். தேவ ஆவியானவர்தாமே சகல பொல்லாத வழிகளைக் குறித்தும் உங் களை எச்சரித்து, உங்கள் கால்களை பொல் லாப்புக்கும் விலக்கி காத்துக் கொள்வாராக.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கு என்னை வழிநடத்தும் தேவனே, உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம். அதிலே நான் தியானமாயிருந்து அதன்படி என் வாழ்க்கையைக் காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6