புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 26, 2022)

கர்த்தரால் ஆகும்

சங்கீதம் 62:5

என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்


ஒரு மனிதனானவன், தன் வீட்டிற்கு பின்னிருந்த சிறிய தோட்டதிலே நடுவதற்காக, தன்னுடைய மகனானவன் கொண்டு வந்த, ஒரு அழகான மர மொன்றை சாடியிலே வைத்திருந்தான். அது பார்வைக்கு அழகாகவும், தோட்டத்தை மெருகூட்டுகின்றதாகவும் இருந்தது. அவனுடைய நண்பனானவன் அவனை நோக்கி: நண்பா, இந்த வகையான மரமானது வீட்டிற்கு உகந்ததல்ல. இதன் கனிகள் புசி ப்பதற்கு உகந்ததல்ல. இதிலே காட்டு விலங்குகளும், சில சந்தர்பங்களும் தங்கியிருக்கும். அத்தோடு இது வளர்ந்து வரும் போது, இதன் வேர்கள் உன் வீட் டின் அத்திவாரத்தை உடைத்துப் போடும் எனவே இது உன் வீட்டிற்கு உகந்தல்ல என்று அறிவுரை கூறினான். ஆனால், அவன் தன் நண்பனின் அறிவுரை கேளாமல், தன் மகனின் மனதை திருப்திப்படுத்தும்படிக்கு அந்த மரத்தை வீட்டிற்கு பின்னாக நட்டு நீர்பாய்ச்சி, பசளைபோட்டு கவனித்து வந்தான். பல ஆண்டுகள் சென்றபின்பு, அவன் நண்பன் கூறி யதைப் போல, அவனுடைய வீட்டிற் பின்புறத்து அத்திவாரமும், அதின் மேலுள்ள சுவர்களும் வெடி க்க ஆரம்பித்தது. அந்த வேளையிலே அவன் தன் நண்பன் கூறிய அறிவுரையை கேளாமல் போனேனென்று மனவருத்தப்பட்டான். பிரியமானவர்களே, நித்திய ஜீவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்டவர்களே, தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியே, ராஜரீகமான ஆசாரியக்கூட்டமே, பரிசுத்த ஜாதியே, அவருக்குச் சொந்தமான ஜனங்களே, தேவனாகிய கர்த்தர் உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்திருக்க, நீங்கள் மறுபடியும் உங்கள் பிள்ளைகளையும், உங் கள் சந்ததியையும் அந்தகார இருளுக்குள் திருப்பிவிடும்படிக்கு சமரசமான வாழ்க்கை வாழ்வதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். திருமண ஒப்பந்தங்களிலே தேவனையே பிரியப்படுத்தும் மனதுள்ளவர்களாக இருங்கள். அதாவது, திருமண நாளிலே, வெளியே காண்பிக்கப் படும், ஆராதனை, கொண்டாட்டங்கள் மட்டுமல்ல, இருமனம் இணையும் திருமணத்திலே, இருமனங்களும் கிறிஸ்துவோடுகூட ஒட்டப்பட்டவர்க ளாக, ஏகசிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகின்ற சிந்தை தரித்தவர்களாக இருக்க வேண்டும். அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளோடு பிணைக்கப்படாதிருங்கள். தேவனை நம்பி அமர்ந்திரு ங்கள். அவரே உங்களுக்கு உன்னதமான நன்மைகளை வைத்திருக்கின்றார்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கு என்னை வேறு பிரித்த தேவனே, என் மனவிருப்பத்தையல்ல, என் கண்களுக்கு வசீகரமானவைகளையல்ல, உம்முடைய சித்தத்திற்கு ஏற்றவைகளை செய்ய கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 14:12