புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 25, 2022)

என் சொல்லும் செயலும்

சங்கீதம் 139:2

என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.


ஒரு ஊரிலே புதிதாக குடியேறிய ஒரு மனிதனானவன், தன் அயலி லுள்ள மனிதர்களுக்கு தன்னை உத்தமனும், சிறப்புக் குடிமகன் (நுடவைந ஊவைணைநn) என்றும் தன் பேச்சிலே தன்னைக் காண்பித்துக் கொண்டான். பல மாதங்கள் சென்ற பின்பு, ஒரு நாள், அவன் வீட்டிற்கு முன்பாக பொலிஸ் வாகனங்கள் வந்து அவனை கைது செய்து கொண்டது. அவன் பல வருடங்களாக வாழ்ந்து வந்த வாழ்க்கையின் விஸ்பரூபம் அன்று ஊரார் யாவருக்கும் வெளி ப்பட்டது. சில வேளைகளிலே, எந்த ஒரு மனிதனும் தான் யார் என்று தன்னைக் குறித்து மற்றவர்களு க்கு கூறிக் கொள்வதும், ஆனால் அவன் உண்மையிலே யார் என்பதும் வேறுபட்டதாக காணப்படலாம். அதாவது, ஒருவனுடைய சொல்லும் செயலும் ஒன்றுபட்டிருக்கின்றதா என்பதை காலம் நிச்சயமாக வெளிப்ப டுத்தும். சில வேளைகளிலே மனிதர்கள் தங்கள் வாழ்வில் அறிந்தோ அறியாமலோ தவறிப் போவதுண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலையிலே, தங்கள் தவறை ஏற்றுக் கொண்டு, மனம் வருந்தி, மனந்திரும்பி தேவனை அண்டிக் கொள்ளுகின்றார்கள். தேவனை அண்டிக் கொண்டிருப்பதே இப்படிப்பட்டவர்களின் மனதின் வாஞ்சையாக எப்போதும் இருக்கின் றது. ஆனால் பல ஆண்டுகளாக தேவனை பற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று கூறியும், தன் தவறை அறிக்கை செய்து விட்டுவிட மனதில்லா மல், அதை நியாயப்படுத்த அதிலே வாழ்பவனாக இருப்பவனும் அல் லது தன் அநீதியை விட்டுவிட மனதில்லாமல் நீதி என்று சுட்டிக்காட்டாத குழுவோடு சேர்ந்து கொள்பவனும் தன் மனதில்; வாஞ்சை தேவனை அண்டிக் கொள்வ தில்லை என்பதை உறுதி செய்கின்றான். எனவே, நம்முடைய மனதின் வாஞ்சை என்ன என்பதைக் குறித்து நாம் கவனமு ள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரு மரமானது அதன் கனிகளால் அறியப்படுவது போல, பொதுவாக, நம் வாழ்வில் முக்கிய நிகழ்வுக ளான: கல்வி, வேலை, திருமணம், உலக பொக்கிஷங்கள் போன்றவற் றில் நம்முடைய மனதில் மறைந்திருந்த தேவனுடைய சித்தத்தைக் குறி த்த எண்ணங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ளும்படிக்கு வெளியா க்கப்படும். பிரியமானவர்களே, தேவன் நம்முடைய இருதயத்தின் நினை வுகளை அறிந்திருக்கின்றார். ஆதலால், அவை தேவனுக்கு ஏற்புடைய தாக இருப்பது நமக்கு நல்லது. வேதனை உண்டாக்கும் வழிகள் உள்ளே மறைந்திருந்தால், அதை அறிக்கை பண்ணி விட்டுவிடுங்கள். தேவ நன் மைக்குரிய வாஞ்சையினால் உங்க இருதயம் நிறைந்திருப்பதாக. தேவனே அவைகளை உங்களுக்கு அருளிச் செய்கின்றவராயிருக்கின்றார்.

ஜெபம்:

என் தேவனேஇ என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும் வேதனை உண்டாக்கும் வழியை அகற்றி நித்திய வழியிலே என்னை நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:20-21