புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 24, 2022)

மனதின் வாஞ்சைகளை நிறைவேற்றுவார்

1 தீமோத்தேயு 6:12

விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்;


வேலையில்லா பிரச்சனை நாட்டிலே அதிகரித்துக் கொண்டும் செல்லும் நாட்களிலே, ஒரு வாலிபனானவன் தனது தகுதிக்கு பொருத்தமான வேலை கிடைக்க வேண்டும் என்று சில மாதங்களாக பல விண்ண ப்பங்களை அனுப்பி, சில நேர்முகத்தேர்வுகளுக்கு சென்று வந்தான். ஆனால் வேலையோ இன்னும் கிடைக்கவில்லை. இப்படியாக நாட்கள் கடந்து கொண்டிருக்கும் போது, ஒரு நாள் அவனுக்கு ஒரு கம்பனியிலி ருந்து அழைப்பு வந்தது. அதன் இய க்குனர் பேசுகையில்: நல்ல பதவியுடனான வேலை, எதிர்பார்த்ததைவிட அதிகமான சம்பளம் மற்றும் அநேக சலுகைகளுடனான வேலை இருக்கின்றது ஆனால் ஞாயிற்றுக் கிழ மைகளிலும் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். அவன் மனதிலே தற்போது பெரிதான குழப்பம். ஜெபத்திற்கு பதில் கிடைத்தது போல அருமையான வேலை ஆனால் தான் சபை ஆராத னைகளில் பங்கு பெறுவதும், நான் செய்யும் உதவி ஊழியங்கள் யாவும் தடைப்பட்டுப் போகும் என்ற ஏக்கமும் அவன் மனதை அழுத்தியது. ஆனாலும் அவன் தன் போதகரிடம் அணுகி, அவருடைய ஆலோச னையை கேட்டான். அதற்கு அவர்: தம்பி, நான் உனக்காக ஊக்கமாக ஜெபிக்கப் போகின்றேன். நீயும், நாளைய தினத்திலே தேவனுடைய பாதத்திலே தரித்திருந்து ஜெபம் செய், தேவன் உன்னை நடத்திச் செல்வார் என்றார். அந்த வாலிபனானவனும் அப்படியே செய்தான். இரண்டு நாட்களுக்கு பின்போ, அந்த வேலையை தான் எடுக்கப் போதி ல்லை என்று தீர்மானம் செய்து கொண்டான். ஏன் அப்பயான தீர்மா னத்தை எடுத்தாய் என்று அவன் போதகர் அவனிடம் கேட்டார்;. அதற்கு அவன்: ஐயா, பணம் இப்போது எனக்கு நிச்சயமாகத் தேவை ஆனால் இன்று என் பணத் தேவைகாக என் நித் திய ஜீவனை குறித்த விடய ங்களை மாற்றிப் போட நான்; தீர்மானம் செய் தால், அந்த வித்து எனக் குள் வளரும். வேலையானது என்னை ஆளுகை செய் யும். பின்பு நான் பணத்திற்காக எதையும் செய்வேன் என்ற எண்ணம் என் னில் உருவா கிவிடும். அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்று தாழ்மை யாக மறுமொழி கூறினான். கர்த்தரைக் குறித்தோ அவனுடைய வைராக் கியத்தையும், அவனுடைய மனதின் வாஞ்சையையும் குறித்து அந்தப் போதகரானவர் ஆச்சரியப்பட்டார். பிரியமானவர்களே, சில மனிதர்கள், ஒரு காரியத்தைப் பெற்றுக் கொள்ளவதற்காக, தங்கள் வாழ்க்கையிலே இன்னொன்றினை மாற்றிவிட அல்லது இழந்துபோக வாஞ்சையாய் இரு க்கின்றார்கள். இன்று, உங்கள் மனதின் வாஞ்சை எதைப் பற்றியிரு க்கின்றது என்பதை நீங்கள் ஆராய்ந்து அறிந்து கொள்ளளுங்கள்

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, உமக்கு காத்திருக்கின்றவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடுவதில்லை. நீர் உம்டைய ஆசீர்வாதங்களிலே தீமை இல்லை என்பதை உணர்ந்து கொள்ளும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 23:1-6