புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 23, 2022)

பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழி

நீதிமொழிகள் 22:6

பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த பெற்றோர், தங்கள் மகனானவன் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களாய் அவனது சிறு வயதிலிருந்தே கல்வியின் அவசியத்தை குறித்த விடயத்திலே கண் ணும் கருத்துமாக இருந்து வந்தார்கள். முக்கிய பரீட்சை வரும் நாட்க ளிலே, அவனோடு அதிக நேரத்தை செலவு செய்து, வாரஇறுதி நாட்க ளிலும், வேறெந்து காரிய ங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், அவனது படிப்பதற்குரிய ஒழுங் குகளை செய்து கொடுத்தார்கள். இதனால் சில நாட்க ளிலே: அவன் வேதாகமத்தை வாசிப்ப தைவிட்டுவிட்டான். குடும்ப ஜெபத்திலே இணைந்து கொள்வதில்லை. ஞாயிறு ஆராதனைக்குக் கூட அவன் சமுகமளி ப்பதில்லை. இவை யாவற்றையும் பெற் றோர் அறிந்திருந்தும், அவர்கள் கல் வியையே அவன் வாழ்க்கையிலே மேன்மைப் படுத்தினார்கள். இப்பொ ழுது அவன் வளர்ந்து திரு மணமாகி, இரண்டு குழந்தைகளோடு தன் குடும்பத்தை நடத்தி வந்தான். ஒரு பெரிய ஸ்தாபனமொன்றிலே, சிரே ஷ;ட நிர்வாகியாக வேலை செய்து வந்தான். வேலையையே தன் வாழ் விலே முதன்மையானதாக வைத்துக் கொண்டு, நேரம் இருந்தால், வசதி யேற்பட்டால், ஆலயத்திற்கு செல்வோம் என்ற மனநிலையுடையவனாக இருந்தான். அவன் வாழ்விலே அவனுக்கு அது தவறானதொன் றாக தெரியவில்லை. ஏனெனில், அவன் தன் வாழ்விலே தனது இளவயதிலே கற்றுக் கொண்டதை விட்டு விலகாதிருந்தான். தன் பிள்ளைகளையும் கூட அதே வழியிலே நடத்தி வந்தான். பெற்றோரின் உண்மையான மன வாஞ்சை அவர்களுடைய மகனானவனின் வாழ்விலே நிறைவேறியது. வயதாகியிருக்கும் அந்த மனிதனாவனுடைய பெற்றோர், தாங்கள் செய்த தவறைக் குறித்து தற்போது மனவேதனைபட்டுக் கொண்டிருந்தார்கள். பிரியமான வர்களே, உங்கள் வாழ்விலே நீங்கள் மனதார எதை மேன் மைப் படுத்துகின்றீர்கள் என உங்களையே நீங்கள் ஆராய்ந்து பாரு ங்கள். கிறிஸ் துவின் சரீரத்தின் நிழலாக சபை இருக்கின்றது. வேதமே நம் பாதைக்கு தீபமும் கால்களுக்கு வெளிச்சமுமாகயிருக்கின்து. தேவ னோடு உறவாடும் ஜெபமே வாழ்வின் வெற்றியாக இருக்கின்றது. நாம் எதை விதைக்கின்றோமோ, அதையே நாம் அறுக்கின்றர்களாக இருப் போம். கல்வி கற்பதிலும், வேலை செய்வதிலும் தவறுறேதுமி ல்லை. ஆனால், முதலாவதாக தேவனுடைய ராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் அதையே கற்றுக் கொடுங்கள்.

ஜெபம்:

பிரகாசமுள்ள மனக் கண்களை எனக்கு தந்த தேவனேஇ இந்த உலகத்தின் போக்கிலே சென்று என் மனக் கண்களை நான் குருடுபடுத்தி விடாதபடிக்குஇ என்றென்றுமாய் நீர் என்னை காத்துக் கொள்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 12:31