புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 22, 2022)

நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்கள்

1 கொரிந்தியர் 12:27

நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்


பல பொருளாதார நெருக்கடிகள் மத்தியிலே, நாளாந்தம் கடுமையான கூலி வேலை செய்து வந்த தகப்பனானவர், பல ஒறுத்தல்களை செய்து, தன் மூத்த மகனின் கல்லூpப் படிப்புக்குரிய கட்டணத்தை கட்டி முடித்தார். படிப்பை முடித்த மகனானவன், பல மாதங்களாக வேலை தேடி க்கொண்டிருந்தான். நாட்டின் தலை நகரிலுள்ள கம்பனியொன்றிலிரு ந்து, குறிப்பிடப்பட்ட நாளொன்றிலே, நேர்முகத்தேர்வுக்கு வரும்படியாக அழைப்பு வந்திருந்தது. அங்கு செல் லுவதற்கு பயணச்சீட்டிற்கான பணமும், தங்குமிடத்திற்கான கட்டணமும் அவனுடைய தகப்பனிடத்தில் இல் லை. பிரயாணம் செல்ல வேண்டிய நாட்கள்; நெருங்கிக் கொண்டிருக்கின்றது, தேவன் ஒரு வழியை உண்டு பண்ணுவார் என்ற நம்பிக்கையோடே அவர்கள் காத்திருந்தார்கள். அதே வேளையிலே, அயலிலுள்ள ஒரு கும்பத்தினர், மூன்று மாதங்களுக்கு பின்பு தூர தேசமொன்றிற்கு செல் லவிருக்கும் சுற்றுலா உல்லாசப் பயணத்திற்கான ஆயத்தங்கள் முழுவதையும் நிறைவேற்றி காத்திருந்தார்கள். இந்த இரண்டு குடும்ப தினரும், வௌ;வேறு ஆலயங்களுக்கு செல்லும் கிறிஸ்தவர்களாக இரு ந்தார்கள். இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். கிறிஸ்வின் சரீரத்திலே நாம் ஒவ்வொருவரும் அவயவங்களாக இருக்கின்றோம். எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்;. ஒரே சரீரத்தின் அவய வங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றா கவேயிருக்கிறது. அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப்பாடு படும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும். அதனால், நாம் சுற்றுலா பயணங்கள் செல்லக் கூடாது என்பது பொருளல்ல. ஆனால், நம்முடைய அத்தியவசியமான தேவை கள் தவிர, நம்முடைய ஆசை விரும்பங்களைக் குறித்த காரியங்களிலே நிதானமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையிலே நன்மையான நிகழ்வுகளும், முன்னேற்றங்களும் நடைபெறும் போது, திக்கற்ற பிள்ளைகள், விதவைகள், வறியோரையும் நினைத்துக் கொள்ள வேண்டும். நாம் நமக்கானவைகளை மட்டும் சிந்திக்காமல், மற்றவர்க ளுடைய வாழ்க்கையிலும் தேவ நன்மைகள் நிறைவேறுவதற்கு நாமும் தேவனுடைய கரத்தின் கருவிகளாக இருக்க முடியும். நாம் அதை வாஞ்சித்தால், தேவனாகிய கர்த்தர் வழிகளை திறந்து தருவார்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, நீர் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக உமக்கு ஸ்தோத்திரம். உம்முடைய திருச்சித்தமானது, இந்த பூமியிலே நிறைவேறுதற்கு என்னையும் ஒரு கருவியாக பயன்படுத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:4