புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 21, 2022)

சிந்தனை, சொல், செயல்....

எபேசியர் 5:10

கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.


மதுபான வெறி கொள்ளுதல், புகைத்தல், நெறிகெட்ட திரைப்படங் களை பார்த்தல் போன்ற கிரியைகளை நான் என்னைவிட்டு முற்றிலும் அகற்றிவிட்டேன். அவைகளை உண்டு பண்ணுகின்றவர்களையும் நான் என் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை. ஏனெனில் தேவன் தங்கும் ஆலயமாகிய என்னுடைய சரீரத்தை, நெறியற்ற காரியங்களால் கெடுத்து, எனது சிந்தையை உலக ஆசைகளை இச்சிக்கத்தக்க காட்சிகளால் நிரப்பிக் கொள்ள எனக்கு விரும்பவில்லை. அது மட்டுமல்லாமல், என் கைகளின் பிரயாசத்தையும், ஈவாய் பெற்றிருக்கும் எனது வாழ்நாட்களையும் நான் வீணடிப்பது மதியீனம். இவ்வுலகில் களியாட்டங்களையுண்டு பண்ணும் வியாபாரங்களை ஆதாயத் தொழிலாக கொண்டிருப்பவர்களை செல்வந்தர்கள் ஆக் கும்படிக்கு, என் நீதியான உழைப்பை விரயமாக்குவதிலும், உண்ண ஆகாரமும், உடுக்க உடையுமின்றி வாடும் வறியவருக்கு நான் மிகவும் உதவுவதையே விரும்புகின்றேன் என்று ஒரு மனிதானவன், தான் பிறந்த நாளிலிருந்து தன்னை அறிந்த போதகரிடம் கூறிக் கொண்டான். போதகர் மறுமொழியாக: மகனே, மிகவும் அருமையாகச் சொன்னாய். நீயும் உன் குடும்பத்தாரும், துன்மார்க்க உளையிலே சிக்கிக் கொள்ளாதபடி க்கு தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உன்னில் உண்டாக்கியிருக்கின்றார் என்றார். பிரியமா னவர்களே, நம்முடைய ஒவ்வொரு; சிந்தனையும்;, பேசும் வார்த்தையும், செய்யும் செயலும், நம்மை நித்திய ஜீவனை நோக்கி ஒரு படி முன்னேறச் செய்யும் அல்லது நித்திய மரணத்தை நோக்கி ஒரு படி முன் னேறச் செய்யும். நம்முடைய செயற்பாடுகள் ஒவ்வொன்றும் நம்மை திராட்சை செடியாகிய ஆண்டவர் இயேசுவோடு உறுதியாய் இணைந் திருக்கச் செய்யும் அல்லது அவரைவிட்டு விலகிப் போவதற்கு வழிநடத்தும். எனவே, நாம் எதை பேசுகின்றோம், எதை கேட்கின்றோம், எதைப் பார்க்கின்றோம், நம்முடைய சிந்தையை எவைகளால் நிரப்புகி ன்றோம், எப்படிப்பட்ட கிரியைகளை நடப்பிக்கிறோம், யாரோடு சேர்ந்து நடக்கின்றோம். நம்முடைய பிரயாசங்களின் பலனை எப்படியாக செலவு செய்கின்றோம் என்பதைக் குறித்து மிகவும் எச்சரிக்கையுள் ளவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். ஞானமுள்ளவர்களை ப்போலக் கவனமாய் நடந்தும் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நித்திய வாழ்வுக்கென்று வேறு பிரித்த தேவனே, நாங்கள் ஞான மற்றவர்களைப்போல நடவாமல், நாட்கள் பொல்லாதவைகளாயிருப்ப தனால் காலத்தைப் பிரயோஜனப்படுத்த உணர்வுள்ள இருதயத்தை எமக் குத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 12:35-37