புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 20, 2022)

மன்னிக்க முடியவில்லை?

ஏசாயா 40:29

சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.


ஒரு தகப்பனானவனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். இருவரும் நன்மை செய்கின்றவர்களும், நீதியின் பாதையிலே நடக்கின்றவர்களு மாயிருந்தார்கள். இவர்கள் வாழ்ந்து வந்த சமுகத்திலே, இவர்களோடு அநேக வருடங்களாக நல்லுறவோடு இருந்து, இவர்களிடமிருந்து பல நன்மைகளை பெற்ற ஒரு மனிதனா னவன், இவர்களுடைய குடும்;பத்தி ற்கு பெரிதான நம்பிக்கை துரோக மொன்றை செய்துவிட்டான். அதை அறிந்து கொண்ட போது இந்த இர ண்டு குமார்களும் மிகவும் மனவேத னையும் கோபமும் அடைந்தார்கள். தகப்பனானவர் தன் குமாரர்களை நோக்கி: என் பிள்ளைகளே, காலங் கள் காயங்களை ஆற்றும். நீங்கள் என்னுடைய குமாரர்கள். நீங்களும் அந்த மனிதனைப் போல துரோகம் செய்கின்றவர்களாக மாறிவிடாதப டிக்கு நிதானமாக நடந்து கொள்ளுங்கள் என்றார். அவர்களில் இளை யவன் தன் தகப்பனானவரை நோக்கி: அப்பா, அந்த மனிதன் ஒரு துரோகி. என் உயிருள்ளவரை அவனை என்னால் மன்னிக்கவே முடி யாது என்று சபதமிட்டுக் கொண்டான். ஆனால் மூத்தவனோ: அப்பா, தாங்க முடியாத மனவேதனை என்னை வாட்டுகின்றது. அந்த மனிதனை மன்னிப்பதற்கு என்னிடத்தில் பெலனில்லை என்று கூறிக் கொண்டான். அந்த தகப்பனானவரோ: தன் குடும்பத்திற்கு துரோகம் செய்த மனித னைக் குறித்தல்ல, தன் இளைய மகனின் மனநிலையைக் குறித்தே மன வேதனை அடைகின்றேன் என்றார்;. பிரியமானவர்களே, நாம் நன்மை செய்திருக்க நமக்கு தீமை செய்யும் மனிதர்களை நாம் துரோகிகள் என்று கூறிக் கொள்வதுண்டு. நமக்கு துரோகம் செய்தவர்களை மன்னி ப்பது மிகவும் கடினமானதும், நம்முடைய மாம்ச பெலத்திற்கு அப்பாற் பட்ட செயலமுமாயிருக்கும். ஆனால் நம்முடைய துரோகங்களுக்காக தம்முடைய உயிரைக் கொடுத்த ஆண்டவராகிய இயேசுவோ நமக்கு நன்மை செய்து கொண்டிருக்கும் போது, நாம் அவருடைய அன்புக்கு விரோதமாக எத் தனை தடவைகள் துரோம் செய்தோம் என்று நம்மை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆனால் நம்க்குள்ளே வாசம் செய் யும் தூய ஆவியானவர், நம்மை தேற்றி, நமக்கு காயம் கட்டி, நம்மால் செய்ய முடியாதவைகளை செய்யும் படி நம்மை பெலப்படுத்துகின்ற வராயிருக்கின்றார். எனவே தேவசித்தம் உங்கள் வாழ்வில் நிறைவேறா மல் இருக்கும்படிக்கு உங்கள் இருதயத்தை கடினப்படுத்தாதிருங்கள்.

ஜெபம்:

ஜெபம்: நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன் என்று வாக்குரைத்த தேவனே, என்னுடைய மாம்சத்தின் எண்ணங்கள் என்னை மேற்கொள்ளாதபடிக்கு காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:13

Category Tags: