புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 19, 2022)

நீங்கள் யாரை சேவிப்பீர்கள்?

யோசுவா 24:23

உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள்


ஒரு சமயம், யோசுவா என்னும் தேவ பக்தன், தேவனுடைய ஜனங்களை அழைப்பித்து, அவர்கள் பூர்வீகங்களை குறித்து அவர்களோடு பேசி, அவர்களுக்கு தேவ ஆலோசனைகளைக் கூறினார். இன்று நாம் விசுவா சத்தின் தந்தை என்று அழைக்கும் ஆபிரகாமின் தகப்பனானவர் ஒரு விக்கிரக ஆராதனைக் காரனாக இரு ந்தார். ஆனால், தேவன் ஆபிரகாமை பிரித்தெடுத்து, விக்கிர ஆராதனையி லிருந்து விடுவித்து, ஜீவனுள்ள தேவ னை சேவிக்கும் பாக்கியத்தை அவ ருக்கு கொடுத்து, அவருடைய சந்ததி யை ஆசீர்வதித்து திரட்சியாக்கினார். பின்பு, எகிப்து தேசத்திலே, சுமார் 400 வருடங்களாக அடிமைகளாக இருந்து, எகிப்தியரின் அருவருப்பான விக்கிரகங்களை வணங்கி வந்த அவர்களை மறுபடியும், பலத்த அற்புதங்களால் விடுதலையாக்கி, ஜீவ னுள்ள தேவனை ஆராதிக்கும்படியான வழிமுறைகளை அவர்களுக்கு கொடுத்து, அவர்கள் பண்படுத்தாத தேசத்தையும், கட்டாத பட்டணங்க ளையும் அவர்களுக்கு கொடுத்து, அந்த தேசத்தின் பலனை புசிக்கும் படி செய்தார். கருப்பொருளாவது, அருகதையற்றவர்களை அவர் பிரித் தெடுத்து, தம்முடைய ஜனங்கள் என்று சொல்வதற்கு வெட்கப்படாமல், அவர்களை மேன்மைப்படுத்தினார். ஆனால் அவர்களில் அநேகமான னோர் வழுவிப்போகின்ற இருதயமுடையவர்களாகி, தங்கள் அருவருப் பான விக்கிரகங்களை சேவிக்கும்படி மறுபடியும் திரும் புகின்ற எண்ண முடையவர்களானார்கள். பிரியமானவர்களே, இன்று தேவாதி தேவன் தாமே, தகுதியற்ற நம்மை, நம்முடைய பழைய மோசம்போக்கும் பழைய வாழ்க்கை முறைமைகளிலிருந்து வேறு பிரித்து, தம்முடைய பிள்ளை கள் என்று அழைப்பதற்கு வெட்கப்படாமல், அந்த பெரிதான பாக்கியத் தைக் கொடுத்திக்கின்றார். ஒருவேளை இன்று நாம், விக்கிரகங்களையும், வார்பிக்கப்பட்ட சொரூபங்களை வணங்காதவர்களாக இருக்கலாம். ஆனால், அழைப்பை பெற்றவர்களின் வாழ்விலே, மறுபடியும் பழைய வாழ்க்கையின் சுபாவங்களாகிய் சமுக அந்தஸ்துகளின் பெருமை, உலக கல்வி, ஆஸ்திகள், கசப்பு, பிரிவினை, நம்மை மறுபடியும் ஆளுகை செய்யுமென்றால், அவைகளே அவர்களின் வாழ்க்கையிலே விக்கிரகங் களும் தேவர்களுமாயிருக்கும். பிரியமானவர்களே, மாம்சத்தின் இச்சை யும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய இந்த உல கத்திலுள்ளவைகளை மறுபடியும் நம்முடைய தேவர்களாக்காமல், நம்மை அழைத்த ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தரையே சேவிப்போமாக.

ஜெபம்:

ஜெபம்: நித்திய வாழ்வை கொடுக்கும் தேவனே, நானும் என் வீட்டாரு மோ என்றால் எப்போதும் உம்மையே கருத்தோடு சேவிக்கும்படிக்கு எமக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீரா. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:24