புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 18, 2022)

எஜமானன் யார்?

ரோமர் 6:16

எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக் கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?


இன்றைய நாளிலே எமது வாழ்வின் எஜமானன் யார்? என்பதைக் குறித்து தியானம் செய்வோம்;. சுருக்கமாக சொல்லப்போனால், ஒருவனுடைய வாழ்க்கையை ஆளுபவரே அவன் வாழ்க்கையின் எஜமானனாக இருக்கின்றார். ஆண்டவராகிய இயேசு தங்களுடைய வாழ்விலே எஜமானனாக இருப்பதை பலர் விரும்புகின்றார்கள், அதை அறிக்கையிடுகின்றார்கள். ஒரு மனிதன் இயேசுவை நோக்கி ஆண்டவரே என்று கூட்பிட்டான். இயேசு உண்மையிலே ஆண் டவராக இருக்கின்றார். மனி தர்கள் அவரை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளவி ட்டாலும், இயேசு ஒருவரே ஆளுகை செய்கின்றவராக இருக்கின்றார். தன் வாழ்க் கையை ஆண்டவர் இயேசு ஆண்டு கொள்ளாதபடிக்கு, அவருடைய வார்த்தைகளை ஒருவன் தள்ளிப்விட்டு, தனக்கு விருப்ப மானவைகளை செய்து வருவானாகில், அவன் வாழ்க்கையிலே சுயமே அவனுடைய எஜமானனாக இருக்கும். தங்கள் சுயத்தை தங்களுக்கு எஜமானாக்கி கொண்டவர்களுக்கு, தேவனுடைய சித்தம் நிறை வேறு ம்படிக்கு தங்களைத் தாழ்த்தி பொறுமையாக காத்திருப்பது மிகவும் கடினமான காரியம். சுயமானது பற்பல வடிவங்களிலே மனிதர்களை ஆண்டு கொள்கின்றது. எடுத்துக் காட்டாக, ஒரு ஆலயத்திலே, துதி ஆராதனை வேளைகளிலே கிற்றார் வாத்தியத்தை ஆர்வமாக வாசிக் கும் வாலிபனொருவன் இருந்தான். அவனைப் போல வேறு வாலிபர்க ளும் அந்த ஆலயத்திலே இருந்தார்கள். அதனால், சபையின் போதகர், அவனை நோக்கி: தம்பி, உன்னைப் போல, இன்னும் சில வாலிபர்க ளும் இங்கே இருக்கின்றார்கள், எனவே ஒரு சில ஆராதனைகளிலே அவ ர்களும் கிற்றார் வாத்தியத்தை வாசிக்கும்படிக்கு நீ அவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்றார். அந்த வாலிபனோ: நான் கிற்றார் வாசிக்காவிட்டால் இங்கே எனக்கு என்ன வேலை என்று கோபித்துத் கொண்டு, அந்த ஆலயத்தைவிட்டு சென்றுவிட்டான். அந்த வாலிபனை ஆண்டு கொண்டிருப்பது எது? அவன் தான் ஏன் ஆலயத்திற்கு செல்லுகின்றேன் என்பதன் பிரதான நோக்கத்தை மறந்தவனாக இருப் பதால் அவன் எங்கு சென்றாலும் தன் சுயத்திற்கே அடிமையாக இருக் கின்றான். பிரியமானவர்களே, இன்று உங்களை ஆளுகை செய் வது எது? உங்களுடைய எஜமானன் யார் என்பதையும், உங்கள் வாழ் வின் பிரதான நோக்கம் என்ன? என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஜெபம்:

அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் எனக்கு தந்தவரே, மறுபடியும் நான் அடிமைத்தனத்தின் கட்டுகளுக்கு உட்படாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 1:3