புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 17, 2022)

மேலான ஆசை எது?

சங்கீதம் 119:34

எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.


நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளும்படிக்காய், அதி மேன்மையான தேவ அழைப்பை பெற்றவர்களே, பூமிக்கு உப்பாகவும், உலகத்திற்கு சுடர்விடும் ஒளியாகவும் ஏற்படுத்தப்பட்டவர்களே, இன்றைய நாளிலே நீங்கள் எதைப் ஆசையாய் பற்றிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை நீங்களே ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு குழந்தையானது, தனக்கு விருப்பமான பொம்மையை இறுகப்பற்றிக் கொண்டிருந்தது. யாரும் அதை பறித்துக் கொள்ள முடியவில்லை. 'வேறொரு ஆசையில்லை இயேசு ராஜா உம்மைத் தவிர' என்று அழகான பாடல்களை, இரட்சிப்பை விரு ம்புகின்றவர்களும், அதை விரும்பா தவர்களும் பாடலாம். ஆண்டவர் இயேசுவை அறியாதவர்களும், உலக திரைப்பட பாடல்களை பாடும் பாடகர்களும், இந்தப் பாடலை பாடுவதற்கு தடையேதும் இல்லை. ஆனால் வேத வார்த்தைகளை பற் றிக் கொண்டிருக்காத இருதயத்திலே, 'வேறொரு ஆசையில்லை இயேசு ராஜா உம்மைத் தவிர' என்ற வார்த்தையின் பொருள் கருத்தற்றதாகவே இருக்கும். கருப்பொருளாவது, நாம் மற்றவர்கள் பார்க்கும்படிக்கு ஆல யத்திலோ, வெளியிடங்களிலோ எதையும் செய்யலாம், சொல்லலாம், அறிக்கையிடலாம். ஆனால், ஒருவன் உண்மையாக எதை ஆசையாய் பற் றியிருக்கின்றான் என்பதை அறியும்படிக்கு அவன் தன்னைத்தானே சோதி த்து அறிய வேண்டும். ஒருவன் எதை ஆசையாய் பற்றியிருக்கின்றா னோ, அவனுடைய உயிர் அவனோடு இருக்கும்வரை அவன் மனதிலிரு ந்து ஒருவரும் அவனிடமிருந்து அதைப் பறித்துக் கொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக, யூத மதத் தலைவர்கள், ஆண்டவர் இயேசுவின் சீஷ ர்களை பிடித்து, அவர்களை அடித்து, காவலிலே வைத்து, நீங்கள் இயேசு என்ற நாமத்தைப்பற்றி பேசக்கூடாது என்று கட்டளையிட்டார்கள். ஆனால், அவர்களோ மரண தண்டனைக்கும்கூட பயப்படாமல், காவலி லும் ஆண்டவர் இயேசுவைபற்றிக் கொண்டு அவரையே சேவித்தார்கள். ஆனால் சில மனிதர்கள், இன்று அற்பமான காரியங்களுக்காக தேவன் கொடுத்த பொறுப்புக்களை உதறித்தள்ளி விடுகின்றார்கள். இவைகளை நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களானால், சுயம் இவர்கள் வாழ்க்கையை ஆட்கொண்டிருப்பதால், தேவனுடைய காரியங்களைவிட தங்கள் சுய விருப்பம், சுய நீதி, சுய கொள்கைகளை அவர்கள் பற்றிக் கொண்டு அவைகளை தங்கள் வாழ்விலே மேன்மைப் படுத்துகின்றார்கள். பிரிய மானவர்களே, இன்று உங்களது ஆசை எதைப் பற்றியிருக்கின்றது?

ஜெபம்:

ஜெபம்: உன்னதமான தேவனே, அதிமேன்மையான அழைப்பை பெற்ற நான், என் சுய எண்ணஙகளை களைந்துவிட்டு, உமது வார்த்தைகளின் வழியிலே வாழும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 4:5-23