புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 16, 2022)

பாரஞ்சுமக்கிறவர்களே

மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.


பல வருடங்களாக தனக்குண்டான வியாதியினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதனானவனை ஒருவராலும் குணப்படுத்த முடி யாமற் போயிற்று. தூரத்திலுள்ள சிறிய ஊர் ஒன்றிலே, ஒரு பரிகாரி இருக்கின்றார் என்றும், அவரிடத்தில், அவனுக்குண்டான வியாதியை குணப்படுத்தும் மூலிகைகள் உண்டு என்று அவன் அறிந்து கொண்ட நாளிலே, பரபரப்புடன், சில வெகும திகளை எடுத்துக் கொண்டு, அந்த பரிகாரியை சந்திக்கும்படி, சீக்கிர மாக அந்த ஊருக்கு பயணம் செய் தான். அடுத்த நாள், காலையிலே அவன் நேரத்தோடு அந்தப் பரிகாரி இரு ந்த மருத்துவ நிலையத்திற்கு சென்றான், அந்த மருத்துவ வளாகத்திற்குள் பலர் பரிகாரியை சந்திப் பதற்காக வரிசையிலே சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த மருத் துவ நிலைய உதவியாளர், அந்த மனிதனை நோக்கி: 'ஐயா, இந்த நிலையத்திலே எல்லா மனிதர்களுக்கும் இடமுண்டு. ஆனால் இந்த நிலையத்திற்குள் உட்பிரவேசிக்க முன்பு, நீங்கள் இந்த மேலங்கியை அணிந்து கொள்ள வேண்டும் அத்தோடு நீங்கள் மட்டும் உள்ளே போகாலாம் ஆனால் நீங்கள் கொண்டு வந்திருக்கும் செல்லப்பிராணி யை வெளியே விட்டுவிட வேண்டும் என்று தயவாக கூறிக் கொண்டார். அதற்கு அந்த மனிதனானவன்: நான் அணிந்திருக்கும் ஆடை சுத்தமா னது, எனக்கு வேறொரு மேலங்கி அவசியமில்லை. நான் நேசிக்கும் என் செல்லப் பிராணியானது செல்ல முடியாத இடத்திற்கு நானும் போகத் தேவையில்லை என்று கூறி கோபத்துடன் தன் ஊருக்கு திரும் பினான். பிரியமானவர்களே, பாரச்சுமையினாலும், பாவ சாபங்களி னாலும் ஆறுதலை இழந்திருக்கின்றவர்கள் யாவரும் ஆண்டவர் இயே சுவிடம் வருவதற்கு எந்தத் தடையுமில்லை. யாவரும் கெட்டுப் போகா மல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதையே அவர் விரும்புகி ன்றார். ஆனால், அவரிடம் வந்த பின்பு, நாம் தூக்கிச் சுமக்கும் சுமைக ளையும்;, பாவ சாப சுபாவங்களையுயும், நாம் பற்றிக் கொண்டிருக்கும் உலக ஆசை இச்சைகளையும் அவர் பாதத்திலே இறக்கி வைத்து விட்டு, நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கும்படி, அவர் கொடுக்கும் பர லோகத்திற்குரியவைகளை பற்றிக் கொள்ள வேண்டும். அவைகளினா லேயே நமது ஆன்மீக நோய்கள் குணமாக்கப்பட்டு, நித்தி மகிழ்ச்சியும் இளைபாறுதலும் நமக்கு உண்டா கின்றது.

ஜெபம்:

நிம்மதியற்ற பழைய வாழ்க்கையை நீக்கி, என்னை கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டியாக மாற்றும் தேவனே, இந்த உலகத்திற்குரியவைகளை களைந்துவிட்டு, பரலோகத்திற்குரியவைகளை பற்றிக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 5:17