புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 15, 2022)

தேவ வசனத்தை பற்றிக் கொண்டிருங்கள்

பிலிப்பியர் 3:14

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.


இசையிலே ஆர்வமுள்ள ஒரு வாலிபனானவன், ஆலயத்திற்கு சென்று, கிற்றார் (புரவையச) வாத்தியத்தை நேர்த்தியாக வாசித்து ஆராதனைகளுக்கு ஒத்தாசையாக இருந்து வந்தான். தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பம் ஒன்றையும் நழுவவிடாமல், கிற்றாரை வாசிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்தான். அவனுக்கு அன்பாயிருந்த சபை மூப்பர்களிலொருவர், அவனை நோக்கி: தம்பி, நீ தவறாமல் நேரத்திற்கு வந்து, கிற்றாரை வாசிப் பதில் காண்பிக்கும் ஆர்வம் மிகவும் மெச்சத்தக்கது. நீ எவ்வளவு ஆர்வ மாக கிற்றாரை பிடித்து வைத்திருக்கின்றாயோ, அதைவிட அதிகமாக நித் திய ஜீவனைப் பற்றிக் கொண்டிரு என்று தயவோடு அவனுக்கு ஆலோ சனை கூறினார். ஏன் அந்த மூப்பரானவர், தனக்கு பிரியமான அந்த வாலிபனுக்கு அப்படிக் கூறினார்? ஏனெ னில், கிறிஸ்துவுக்குள் வளர்ந்து வரும் அந்த வாலிபனானவனின் மனதிலே, இசைக் கருவியை வாசிப்பதே ஆலய ஒன்றுகூடலின் முதன்மையான நோக்கமாக இருக்கின்றதென்பதை அவர் கண்டு கொண்டார். அவனுக்கு இசைக் கருவியை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடையாமற் போகும் நாளிலே அவன் மனமுடைந்தவனாகி, சிந்திக்காமல் தவறான தீர்மான ங்களை எடுத்துக் கொள்ளகூடும் என்பதை அந்த மூப்பனானவர் அறிந்திருந்தார். ஆம் பிரியமானவர்களே, நல்ல காரியங்களிலே ஆர்வமாக இருப்பது நல்லது ஆனால் பாடசாலைக்கு செல்லும் மாணவனானவன், பாடசாலைக்கு செல்லும் முதன்மையான நோக்கத்தை அறிந்து, அதிலே தன் கவனத்தை வைத்திருப்பதையே அவனுடைய பெற்றோரும் ஆசிரியர்களும் விரும்புவார்கள். இதற்கொத்ததாகவே, நாம் ஆலயத்திற்கு செல்லும் போது, அங்கே அநேக நல்ல காரியங்கள் உண்டு. ஆனால், ஒருவன் தான் ஏன் ஆலயத்திற்கு செல்கின்றேன் என் பதன் முதன்மை யான நோக்கத்தை மறந்து போவானானால் அதனால் அவனுக்கு பலன் என்ன? நாம் நம்மை விட்டு எடுபடாத நல்ல பங்காகிய நித்திய ஜீவனைக் கொடுக்கும் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருப்பதையே பற்றிக் கொண்டிருக்க வேண்டும். இன்று மனிதர்கள், தேவனுக்கென்று தங்கள் வாழ்க்கையிலே அநேக கிரியைகளை நடப்பிக்க லாம். ஆனால் தினமும் வேதத்தை வாசித்து, தியானித்து, பிதாவாகிய தேவனையும், அவர் அனுப்பினவராகிய இயேசுக் கிறிஸ்துவையும் அறிகின்ற அறிவிலே வளர்வதே நமக்கு இன்றியமையாதது.

ஜெபம்:

ஜெபம்: முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடுங்கள் என்ற தேவனே, நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதையே என் பிரதான நோக்கமாக வைத்து முன்னேறிச் செல்ல கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-2