புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 13, 2022)

வெற்றி வாழ்க்கை

ரோமர் 12:12

ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.


பாபிலோனின் மகா ராஜாவாகிய நேபுகாத்நேச்சரின், குமாரனாகிய பெல்ஷாத்சார் ராஜ்யத்தை ஆளுகை செய்யும் நாட்களிலே, பெல்ஷாத்சார் பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக தன்னை உயர்த்தினதால், அவன் ராஜ்யபாரம் அவனிடமிருந்து எடுக்கப்பட்டு, ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடு க்கப்பட்டது. மேதியனாகிய தரியு என்பவன் ராஜ்யத்தைக்கட்டிக் கொண்டான். அந்நாட்களிலே, சிறை யிருப்பிலிருந்த தானியேல், தேவ னாகிய கர்த்தருக்கு பயந்து அவர் வழியிலே நடந்து வந்ததால், தானியேலுடைய காரியங்கள் ஜெயமாக இருந்தது. தானியேலுக்குள் விசேஷpத்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்ப டுத்த தரியு ராஜா நினைத்தான். அதனால் அந்த தேசத்தின் அதிகாரிகள் தானியேலின் மேல் எரிச்சல் கொண்டு அவனுக்கு எதிராக சதித்திட்டம் செய்தார்கள். அதென்னவெனில், எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய தரியுவைத் தவிர எந்த தேவனையானாலும் மனுஷனை யானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக்கு றித்து விண்ணப்பம்பண் ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட வேண்டும் என்று கட்டளையை பிறப்பிக்கும்படி துர்ஆலோசனையை பிணைத்தார்கள். தானியேல் தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்துவது அவன் வாழ்க்கையிலே வழக்கமான செயலாக இருந்து வந்தது. எனவே, தானியேல் நிச்சயமாக இந்த ராஜா கட்டளையையும் பொருட்படுத்தாமல், தன் தேவனை நோக்கி ஜெபம் செய்வான் என்பதை அவர்கள் உறுதி யாக அறிந்திருந்தார்கள். பிரியமானவர்களே, பாருங்கள் அந்நியர்கள் கூட தானியேல் தன் தேவன்மேல் கொண்டுள்ள பக்தியைக் குறித்து சாட்சி கொடுத்தார்கள். அவன் ஜீவனுள்ள தேவனை இடைவிடாமல் ஆராதிக்கின்றவன் என்பதை அவர்கள் அறிக்கையிட்டார்கள். தானியேல் தன் தேவனோடு கொண்டுள்ள உறவிலே நிலைத்திருந்து எல்லா சூழ்நிலைகளையும் ஜெயம் கொண்டான். உங்கள் வாழ்க்கை எந்நிலையி லிருந்தாலும், எப்படிப்பட்ட அழுத்தங்கள் உங்களை நெருக்கினாலும், நம்மை அழைத்த ஜீவனுள்ள தேவனை நோக்கி தினம், ஜெபியுங்கள், விண்ணப்பம் பண்ணுங்கள், நன்றி செலுத்தி ஆராதியுங்கள். தானியேல் தேவனுக்குள் வெற்றி வாழ்க்கை வாழ்ந்தது போல நீங்களும் வெற்றி வாழ்க்கை வாழும்படி, தேவனையே சார்ந்திருங்கள். அவரே நம் வாழ்வின் ஆதாரம் என்பதை ஒரு போதும் மறந்து விடாதிருங்கள்.

ஜெபம்:

ஜெயம் கொடுக்கும் தேவனே, எந்தக் காலத்திலும், எந்த வேளையிலும், உம்மை துதிக்கும் துதி என் நாவிலிருப்பதாக. நான் எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்ய பிரகாசமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - தானியேல் 6:16