புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 12, 2022)

வெற்றிசிறக்கப் பண்ணும் தேவன்

2 கொரிந்தியர் 2:14

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்


தானியேலும் அவனோடுகூட சில வாலிபர்களும், அவர்களுடைய இள வயதிலே சிறைப்பிடிக்கப்பட்டு, பாபிலோன் தேசத்திற்கு கொண்டு செல் லப்பட்டார்கள். இந்த வாலிபர்கள் எத்தகையவர்கள்? ராஜகுலத்தார்களி லும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர் களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர் க ளும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமை யுள்ளவர்களுமாக இருந்தார்கள். இவையெல்லாவற்றிற்கும் மேலாக தேவனாகிய கர்த்தரை குறித்து வாஞ் சையும் வைராக்கியமும் இவர்களி டம் இருந்தது. தங்கள் சொந்த தேச த்திலே உயர்ந்த நிலையிலே இரு ந்த நாட்களிலும், தாழ்த்தப்பட்ட அடி மைகளாக அந்நிய தேசத் திற்கு கொண்டு செல்லப்பட்ட போதும், தங்கள் பிரதிஷ;டையின்படியே சுக போகமான தீட்டுள்ள அந்நிய காரியங்களை வெறுத்து, தேவனா கிய கர்த்தரை விட்டு சற்றும் விலகாமல், அவரையே சேவித்தார்கள். தேவனாகிய கர்த்தர் அவர்களோடிருந்தார். இவர்கள் தங்கள் உயர்வான நாட்களில் மட்டுமல்ல, தாழ்விலும் தேவனையே பற்றிக் கொண்டி ருந்தார்கள். தங்கள் வழியாக தேவனாகிய கர்த்தருடைய நாமம், அந்நி யர்கள் மத்தியிலே வெளிப்படும்படிக்கும், மெய்யான தேவன் யார் என் பதை புறஜாதியர்கள் அறியும்படிக்கும் இவர்கள் தேவனுடைய கரத்தி லுள்ள கருவிகளானார்கள். எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுடைய சித்தம் தங்களில் நிறைவேறும்படிக்கு இடங்கொடுத்தார்கள். இவர்கள் எங்கிருந்தாலும், என்ன நடந்தாலும், தேவனாகிய கர்த்தர் தங்களோடு இருப்பதன் மேன்மையை உணர்ந்தவர்களாக அவரையே வாஞ்சித்து நாடினார்கள். பிரியமானவர்களே, எந்த சூழ்நிலையிலும், தேவ சித்த த்தை நம்மில் நிறைவேற்ற, நம்மை வெற்றி சிறக்கப்பண்ணும் கிறிஸ்து இயேசு நம்மோடிருக்கின்றார். எனவே, நீங்கள் எங்கிருந்தாலும், இக்கா லத்து பாடுகளால் சோர்ந்து போகாமல், பாடுகளின் மத்தியிலும் தேவனுடைய நாமம் மகிமைப்படும்படிக்கு நம்மை ஒப்புக் கொடுப் போமாக. இனி வரவிருக்கும் மகிமையை நாடி கிறிஸ்துவுக்குள் உறுதி யாய் இருப்போமாக.

ஜெபம்:

கிறிஸ்துவுக்குள் நம்மை வெற்றி சிறக்கப் பண்ணும் தேவனே, சூழ்நிலைகளைவிட, பெரியவராகிய, நீர் நம்மோடு இருப்பதன் பாக்கியத்தை உணர்ந்து கொள்ள ஞானமுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - ரோமர் 8:37-39