புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 11, 2022)

கர்த்தரின் வேளைக்காக காத்திருப்பவர்கள்...

ஆதியாகமம் 39:2

கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்;


தன் சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டு, அடிமையாக புறதேசத்து வியாபாரிகளுக்கு விற்கப்பட்டுபோன யோசேப்பு என்னும் வாலிபனானவன், எகிப்து தேசத்திலே, ஒரு அதிகாரியின் வீட்டில் வேலைக்காரனாக பணி புரிந்து வந்தான். அவனுடைய வீட்டுக்காரியானவள், அவன் செய்யாத குற்றத்தை அவன்மேல் சுமத்தினதால், அவனை சிறையிலே போட்டார்கள். அவனை தேற்றுவதற்கு அவன் தாய், தந்தையரோ, கூடப் பிறந்த சகோதர சகோதரிகளோ, உறவினர்களோ, நண்பர்களோ அவனருகே இரு க்கவில்லை. ஆனால், அவன் சென்ற இடமெல்லாம், தேவனாகிய கர்த்தர் அவ னோடே இருந்தார், சர்வ வல்லமையுள்ளவர் அவன் செய்கிற யாவையும் வாய்க்கப்பண்ணினார். தனக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தங்களை குறித்து அவன் பொருட்படுத்தாமல், தேவனுடைய அநாதி தீர்மானம், தன்னில் நிறை வேற இடங்கொடுத் தான். குறித்த காலம் வந்த போது, அவனை சிறை ச்சாலையிலே இருந்து எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் அரண் மனைக்கு தீவிரமாக கொண்டு சென்றார்கள். அந்த நாளிலே அவன் எகிப்தின் இரண்டாவது ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டான். பிரியமானவ ர்களே, நாம் குற்றம் செய்தால், அதிலிருந்து மனந்திரும்பி தேவனுக்கு பிரியமான வாழ்க்கைக்கு, நம்மை நாம் ஒப்புக் கொடுக்க வேண்டும். நாம் குற்றம் செய்யாதிருந்தும், நாம் நெருக்கப்பட்டால் ஆண்டவர் இயேசு வினிமித்தம் பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். கர்த் தராகிய இயேசு உங்களோடு இருக்கின்றார் என்பதை ஒருபோதும் மறந்து போய்விடாதிருங்கள். நிர்பந்தங்களும், நெருக்கங்களும் பல இடங்களிலே இருந்து உண்டாகலாம். அவைகள் உங்களை சூழ்ந்து கொண்டு, உங்கள் வாழ்க்கையை பின்னடையச் செய்யலாம். பலர் முன்னிலையிலே அவமானங்கள் ஏற்படலாம். ஆனால், நீங்கள் நன்மை செய்து பாடநுபவிக்கும் போது, தேவ சித்தம் நிறைவேறும்படி காத்திரு க்கும் போது, அவர் முன்குறித்த காலத்திலே, அவர் உங்களு க்கென முன்குறித்தவைகள் யாவையும் தீவிரமாக நிறைவேற்றுவார்;. உன்னதங் களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தரு க்குச் சமான மானவர் யார்? அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைக ளைப் பார்க்கு ம்படி தம்மைத் தாழ்த்துகிறார். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார். எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். ஆவ னைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப் பண்ணுகிறார்.

ஜெபம்:

என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கல முமான தேவனே, என் ஆத்துமா உம்மை நம்பி அமர்ந்திருக்கிறது. உம்மிடமிருந்து எனக்கு இரட்சிப்பு வரும். உம் வழிநடத்துதலுக்கு நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபாகமம் 28:7