புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 10, 2022)

யாருக்கு விடுதலை தேவை?

அப்போஸ்தலர் 16:25

நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்


ஒரு சமயம், தேவ ஊழியர்களாகிய பவுலும் சீலாவும், நற்செய்தி அறிவிக்கும்படியாக பிலிப்பி என்ற ஊருக்கு சென்ற போது, அந்த ஊரின் அதிகாரிகள், அவர்களை பிடித்து, வஸ்திரங்களை கிழித்து, அவ ர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்க ளைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளை யிட்டார்கள். சரீரத்திலே காயங்களோடிருந்த அவர்களை சிறைச்சாலைக் காரன், உட்காவலறையிலே அடை த்து, அவர்கள் கால்களைத் தொழும ரத்தில் மாட்டிவைத்தான். அந்த இக் கட்டான சூழ்நிலையிலும், சிறை வாழ் வை குறித்து கருத்தில் கொள்ளாமல், நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட் டிருந்த மற்ற கைதிகளும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபார ங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது. உடனே கதவுகளெ ல்லாம் திறவுண்டது. எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ள ப்போனான். பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே. நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான். அந்த இராத்திரியிலே, பிலிப்பா ஊரிலேயிருந்த அந்த சிறை ச்சாலைக்காரனும் அவன் குடும்பத்தாரும் இயேசுவை விசுவாசித்து, அவரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்கள். அன்று இராத்திரியிலே யாருக்கு உண்மை யிலே விடுதலை தேவைப்பட்டது? புவுல் சீலாவும், இந்த உலகத்திலி ருந்த சிறைச்சாலையில் தற்காலிகமாக வைப்பட்டிருந்தார்கள். அவர் கள் சரீரத்திலே காயங்களும் நோவுகளும் உண்டாயிந்தது. ஆனால் அந்த சிறைச்சாலைக்காரனும் அவன் குடும்பத்தாரினதும், ஆத்துமாவானது நித் திய காரிருள் நிறைந்ததாக, அந்த காரத்தின் தீய சக்திக்குள் சிறைப்பட்டி ருந்து. தேவ ஊழியர் வழியாக அவர்கள் சிறைவாழ்வு நீங்கி ப்போயி ற்று. பிரியமானவர்களே, நீங்களும் நெருக்கப்படுகின்ற வேளை யிலே, பவுல் சீலாவைப் போல எக்காலத்திலும் தேவனைத் துதியுங்கள். தேவன் தாமே, உங்கள் வாழ்க்கை வழியாக, உங்களைச் சூழ உள்ளவர்களின் வாழ்விலே ஆச்சரியமான விடுதலையை, உண்டு பண்ணுவார்.

ஜெபம்:

பாடுகள் மத்தியிலே பரம வெற்றியைக் கொடுக்கும் தேவனே, என்னுடைய நெருக்கத்தின் நாட்களிலே நான் சோர்ந்து போகாதபடிக்கு, உம்மை துதித்துக் கொண்டிருக்கும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 118:1-5