புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 09, 2022)

சிறைவாழ்வு மறையும்

2 தீமோத்தேயு 4:18

கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்


நான் வீட்டிலே எவ்வளவு நன்மைகள் செய்தாலும் போதாது. எந்த விதமான நன்றியறிதலோ, அல்லது மிகவும் சிறிதான பராட்டுதலின் வார்த்தைகளோ அங்கு இல்லை. எப்பக்கமும் நெருக்கப்பட்டு வாழும், நிர்பாக்கியமான சிறைவாழ்வு வாழ்வை வாழ்ந்து வருகின்றேன் என்று ஒரு ஸ்திரியானவள் தன் மனவேதனையைக் குறித்து கண்ணீரோடு தன் போதகரிடம் கூறினாள். போதகர் அவளை நோக்கி: மகளே, இந்தப் பூமியிலே எந்த ஒரு காரியமும் நிரந்தரமானது அல்ல. எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. எந்த இரவும் நீடித்திருப்பதில்லை, விடியல் அதற்கு ஒரு எல்லையாக இருக்கின்றது. எல்லா சூழ்நிலைகளிலும், சகலவித ஆறுதலின் தேவனாகிய இயேசுவை நோக்கிப்பார். உன் நிலைமையை நன்றாக அறிந்தவரிடம், ஸ்தோத்திரத்தோடே கூட விண்ணப்பம் செய். எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானமானது உன் இருதயத்தையும் உன் சிந்தைiயும் இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள் ளும். உப்பு அதன் தன்மையை இழந்து போனால், அதனால் பலனில்லை. எனவே, உன்னுடைய நல்ல சுபாவங்களை நீ மாற்றிப்போடாமல், பொறுமை யாய் இரு. நானும் உன க்காக வேண்டுதல் செய்கின்றேன் என்று ஆறுதலின் வார்த்தைகளை அவர் அவளிடம் கூறினார். பிரியமானவர்களே, அந்த ஸ்திரியானவள் கூறியது போல, ஒருவனுடைய எண்ணத்திற்கு விரோதமாக ஒரு மனிதனானவன் நடத்தப்படும் போதும், பலவந்தம் பண்ணப்படும் போதும், அந்த மனிதனானவன் கைதியாக சிறைப்பட்டு போனவனைப் போலவும், தன் இஷ்டத்திற்கு விரோதமாக அடிமைத்தனமான வாழ்க்கை வாழ்பவனைப் போலவும் இருப்பான். இத்ததைகய சூழ்நிலைகள் மனிதர்களுடைய வாழ்க்கையிலே, வீட்டிலோ, வேலையிலோ அல்லது வேறெந்த வெளியிடங்கிலோ ஏற்படலாம். அதாவது, ஒரு இடத்திலே இருப்பதற்கு எனக்கு இஷ்டம் இல்லை, ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலே நான் அங்கே இருக்கும்படியாக நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றேன் என்பது போன்ற ஒரு சிறைவாழ்வு ஏற்படுவதுண்டு. சிலருடைய வாழ்க்கையிலே, இந்த உலகமே ஒரு சிறையைப் போல இருக்கின்றது. எல்லாத் தீமையினின்றும் தம்முடைய ஜன ங்களின் சிறையிருப்பை திருப்பி இரட்சிக்கின்ற தேவனானவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவே இருக்கின்றார். எனவே சிறைவாழ்வை, சீர்வாழ்வாக மாற்றும் கர்த்தரை நோக்கிப்பாருங்கள். அவர் உங்கள் பாரச் சுமைகளை நீக்கி, இளைபாறுதலை கட்டளையிடுவார்.

ஜெபம்:

உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று வாக்குரைத்த தேவனே, என்னை எல்லாத் தீமையினின்றும் விலக்கிக் காத்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எரேமியா 15:20-21