புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 08, 2022)

தேவன் உன்னோடு இருக்கின்றார்

ஏசாயா 43:2

நீ தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும் போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை;


சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்தும்படிக்கு, அழகானதும், இடாம்பீகரமானதுமான விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. காலநிலைகள் விளையாட்டுப் போட்டிகளை பாதிக்காதபடிக்கு, அந்த அரங்கின் கூரையானது, திறந்து மூடக்கூடிய விதமாக ஏற்படுத்தப்பட்டி ருந்து. ஓடுபாதைகள் யாவும் நேர்த்தியாகவும் சமமாகவும் அமைப்பட்டு, சிவுப்பு நிற வர்ணம் பூசப்பட்டு, ஓட்டப் பந்தைய வீரர்களுக்கான, தட ங்கள் ஒவ்வொன்றாக பிரிக்கப் பட்டிருந்தது. நூறு மீற்றர் ஓட்டப் போட்டியின் நாள் வந்தபோது, ஓட்டப் பந்தைய வீரர்கள் யாவ ரும் ஆயத்தமாக தங்களுக்கெ ன்று நியமிக்கப்பட்ட தளங்க ளிலே நின்றார்கள். அவர்கள் தாங் கள் ஓடுவதற்கு ஏதுவான, உடை களையும், காலணிகளையும் அணிந்தவர்களாக காணப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பயி ற்சி செய்வதற்கு, அந்தந்த நாடுகளிலே உள்ள நலன் விரும்பிகளும், ஸ்தாபனங்களும் அவர்கள் செலவின் பெருந் தொகையை ஆதரவாக வழ ங்கியிருந்தார்கள் (ளுpழளெழசளாip). அவர்கள் யாவரும் சரியான நேரத் திலே ஓட்டத்தை ஆரம்பித்தார்களா? குறித்த ஓடு தளத்திலே ஓடினா ர்களா? எவ்வளவு நேரம் எடுத்தார்கள்? என்பதை அறியும்படிக்கு தொழி ல்நுட்ப கருவிகளும்; பொருந்தப்பட்டிருந்தது. பல்லா யிரக் கணக்கான ஜனங்கள், அவர்களை ஊக்குவித்து கரகோசங்களை எழுப் பிக் கொண் டிருந்தார்கள். கருப்பொருளாவது, அவர்கள் அந்த ஓட்டப்பந்தைய த்தை ஓடி முடிப்பதற்கு எந்த தடையுமில்லாதபடிக்கு, சூழ்நிலைகள், காலநிலைகள் யாவும் அவர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டி ருந்து. பிரியமானவர்களே, நம்முடைய பரம பந்தையப் பொருளை நோக்கிய ஜீவ ஓட்டமானது இத்தகைய ஓட்டப் போட்டிபோல, யாவும் நம் ஓட்டத்திற்கு சாதகமாக அமையப்போவதில்லை. நம்முடைய ஜீவ ஓட்டமானது, பல தடைகளைத் தாண்டி, கரடு முரடான பாதையிலே ஓடும் நீண்ட தூர மரதன் (ஆயசயவாழn) ஓட்டத்தைப் போன்றது. ஆனால், நமக்கோ தடைகளை உடை ப்பவரும், பள்ளங்களை நிரப்புகின்றவரும், கரடு முரடான பாதைகளை செவ்வைப் படுத்துகின்றவரும், கோணலானவைகளைச் செவ்வையாக் குகின்றவரும், வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப் பாள்களை முறிக்கின்றவருமான தேவன் நம்மோடு இருக்கின்றார். எனவே பொறுமையோடு நமக்கு நியமித்த ஓட்டத்திலே ஒடக்கடவோம்.

ஜெபம்:

சகல சத்தியத்திலும் என்னை நடத்திச் செல்லும் தேவனே, சாதக மற்ற சூழ்நிலைகளை நான் நோக்கிப் பார்த்து சோர்ந்து போகாமலும், துணையாளராகிய உம்மை நோக்கி பார்க்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கின்றேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-3