புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 07, 2022)

விசுவாசித்தின் பலனாகிய இரட்சிப்பு

1 பேதுரு 1:9

உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்


அடுத்த வருடத்திலே நடைபெறவிருக்கும், தேசிய ஓட்டப் பந்தைய போட்டியிலே போட்டியிடும்படியாக, ஒரு வாலிபனானவன், தன் பெய ரையும் பங்கு பெறுவோர் பட்டியலிலே பதிவு செய்திருந்தான். அவன் தன் தந்தையைப் போல வெகு வேகமாய் ஓடக்கூடியவனாக இருந் தான். தான் ஓட்டப் பந்தையப் போட்டியிலே பதிவு செய்துள்ளேன் என்று தன் நண்பர்களிடம் பெருமிதமாக கூறிக் கொண்டவன், ஆயத்தப்பட வேண்டும் என்னும் சிந்தையில்லாதவனாக, பற்பல காரியங்களிலே அநேக நேரங்களை செலவழித்து வந்தான். ஒரு நாள், அவனுடைய தாயா னவள் அவனை நோக்கி: மகனே, நீ ஓட்டப் பந்தையப் போட்டியிலே உன் பெயரை பதிவு செய்திருக்கின்றாய், ஆனால் நீ பயிற்சி ஏதும் எடுக்கின்றது போல தெரியவில்லையே என்றாள். அதற்கு அவன்: நான் யாருடைய மகன் என்று நினைக்கின்றீர்கள்? நான் என் அப்பாவைப் போல ஓடி வெற்றி பெறுவேன் என்று கூறிக் கொண்டான். அதற்கு தாயானவள்: நீ அப்பாவை போல ஓடுவதற்கு, அவர் பயிற்சி செய்தது போல நீயும் உன் வாழ்க்கை முறையை ஒழு ங்குபடுத்தி தினமும் பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினாள். பிரியமானவர்களே, இவ்வண்ணமாக நாம் நித்திய ஜீவனுக் கென்று அழைப்பை பெற்றிருக்கின்றோம். கிருபையினாலே விசுவாச த்தைக் கொண்டு அந்த அழைப்பை பெற்றுக் கொண்டோம். நம்முடைய விசுவாசத்தின் பலனாகிய இரட்சிப்பு நிறை வேறும் போது, அழியாத சுதந்திரமானது பரலோகிலே நமக்கென்று ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கி ன்றது. இந்த அழைப்பிலே நாம் யாவரும் மிகவும் சந்தோஷப்படுகின் றோம். என்றாலும், குறித்த காலம் நிறைவேறும்வரைக்கும் நாம் இப் பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படு கின்றோம். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப் பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசமானது சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்க ளுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். எனவே, பரம அழைப்பை பெற்ற நாம் அசதியாக இருக்க முடியாது. ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கும் சுதந்திரத்தை நாம் பெற்றுக் கொள்ளு ம்படிக்கு எப்போதும் ஆயத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த வாழ்க்கையானது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணப்பொழுதும் நாம் கர்த்தராகிய இயேசுவோடு வாழும் வாழ்க்கையாக இருக்கிறதே.

ஜெபம்:

விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற தேவனாகிய கர்த்தாவே, பரம அழைப்பை பெற்ற நான், அந்த அழைப்புக்கு பாத்திரமுள்ளவனா(ளா)க வாழும் வாழ்க்கையை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 9:24-26

Category Tags: