புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 06, 2022)

ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டியவைகள்

2 பேதுரு1:4

மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.


கிறிஸ்து இயேசுவின் வழியாக நமக்கு உண்டாயிருக்கும் மேன்மைகள் சிலவற்றை நாம் பட்டியல் படுத்திப் பார்ப்போம். நித்திய மரண ஆக்கினையிலிருந்து விடுதலையாக்கப்பட்டு, நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும் தகுதியை அடைந்தோம். பிதவாகிய தேவனுடைய பிள்ளை கள், ராஜரீகமான ஆசாரிய கூட்டம், பரிசுத்த சந்ததி, வேறுபிரிக்கப்பட்ட தேவனுடைய ஜனங்கள், நல்ல மேய்ப்பனாகிய இயேசுவின் மேய் ச்சலின் ஆடுகள், இயேசுவின் இர த்தத்தினாலே கழுப்பட்ட நீதிமான் கள் என்ற நம்முடைய தகுதிக்கு மிஞ்சின மேன்மைகளுக்கு பங்கா ளிகளாக நாம் தெரிந்து கொள்ள ப்பட்டி ருக்கின்றோம். கிறிஸ்து வை தங்களுடைய சொந்த இரட்ச கராக ஏற்றுக் கொண்ட யாவருடைய வாழ்க்கையிலும் இவைகள் உண் மையாக இருக்கின்றது (யோவான் 1:12). இவைகளை நாம் வாயினாலே அறிக் கையிடுவதற்கு தயங்கிக் கொள்வதில்லை. அறிக்கையிடு வது நல்லது. ஆனால், அந்த அறிக்கையோடு நின்றுவிடாமல், அந்த அறி க்கைகளின்படி நம் வாழ்க்கையானது நாளுக்கு நாள் மாறுதலடைய வேண்டும். நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்டவர்கள், இந்த உலக போக்கை விட்டுவிட்டு, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராட வேண்டும். தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்பவர்கள், கீழ்படிவுள்ள பிள்ளைகளாக, வாழ்வில் ஏற்படும் எல்லா சூழ்நிலைகளி லும், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிவையே தமது சாட்சியாக காண் பிக்க வேண்டும். ராஜரீகமான ஆசாரியர்களாக அழைக்கப்பட்ட நாம், நல்ல ஆசாரியனைப் போல, ஆவியோடும் உண்மையோடும், பரிசுத்த அலங்காரத்தோடும். தேவனுக்கு பிரியமான ஆராதனை செய்ய வேண் டும். வேறு பிரிக்கப்பட ஜனங்கள், தேவனுடைய சாட்சிகளாக, வாழ்க் கையயில் ஏற்படும் எதிரிடையான சூழ்நிலைகளிலும் தெய்வீக சுபாவங் களை தங்களில் காண்பிக்க வேண்டும். நல்ல மேய்ப்பனாகிய இயேசு வின் மேய்ச்சலின் ஆடுகளாக இருக்கும் நாம், அவருடைய சத்தத்தை கேட்டு, அவருக்கு பின்பாக செல்ல வேண்டும். அப்படி நாம் செய்யும் போது, நாம் செய்யும் அறிக்கைக்கு பாத்திரராக நடந்து கொள்வோம். அதனால், முடிவிலே நமக்கு நித்திய கன மகிமை உண்டாகும். எனவே மேன்மையான வாக்குத்தத்தங்களை அறிக்கையிடுகின்றவர்களாக மாத் திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருப்போமாக.

ஜெபம்:

உம்முடைய திவ்விய வல்லமையினாலே, ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் எனக்கு கொடுத்த தேவனே, நான் நல்ல அறிக்கை செய்து, சாட்சியுள்ள வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:22