புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 05, 2022)

எந்தன் வாழ்வின் மேன்மை

சங்கீதம் 20:7

நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்


என்னுடைய பாட்டனார் மிகவும் ஞானமுள்ளவர் என்பதற்கு இந்த ஊர் வாழும் ஜனங்களில் அநேகர் இன்னும் சாட்சியாக இருக்கின்றார்கள் என்று ஒரு மனிதனானவன் தன் பாட்டனாரின் பெயராலே, தனது பெயருக்கும் ஊரில் அங்கீகாரத்தை அடைந்து கொள்ளும்படி முயற்சி செய்து வந்தான். அதாவது, இன்னார் என்னுடைய பாட்டனார் அதனால் அவருக்கிருக்கும் கனமும் மரியாதை யும் என் குடும்ப த்திற்கு நீங்கள் கொடு க்க வேண்டும் என்பதே அவனுடைய முழு எண்ணமாக இருந்து வந்தது. அந்த ஊரிலுள்ள மூப்பர்களிலே ஒருவர், அந்த மனிதனை அழைத்து, தம்பி, உன் பாட் டனாரை எனக்கு நன் றாகத் தெரியும். அவர் ஒரு அருமையான மனிதனாகவே வாழ்ந்தார். நீயும் அவரைப் போல அவர் நற்பெயருக்கு சாட்சியாக இருக்கும்படிக்கு, உன் வாழ்க்கையை அவ ரைப் போல மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் கர்த்தருக்கு பயந்து அவருடைய வழியிலே வாழ்ந்து வந்தார் என்று கூறினார். இவ்வண் ணமாக, இவ்வுலகிலே, மனிதர்கள் தங்கள் சந்ததியின்; பாரம்பரியங்கள், மதச்சடங்காச்சாரங்கள், குறித்தும், பூர்வீகங்களின் மேன்மையைக் குறி த்தும் பேசுவதும் அதிலே பெருமை பாராட்டுவதும் வழக்கமாக இருந்து வருகின்றது. சில சந்தர்பங்களிலே, மற்றய மனிதர்களின் வாயை அட க்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தங்கள் முன்னோர்களின் துன்மார் க்கமான வாழ்க்கையையும், வன்முறையான செயற்பாடுகளைக் குறித் தும் கூட ஒரு சிலர் மேன்மை பாராட்டுவதுண்டு. பிரியமானவர்களே, இன்று நீங்கள் தேவனுடைய சமுகத்திற்கு செல்லும் போது, எதைக் குறித்து மேன்மை பாராட்டுவீர்கள்? நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போல வாழ்வதில்லை. ஊரிலு ள்ள அந்தப் பாவிகளைப் போல நான் நடந்து கொள்வதில்லை. ஒழுங் காக உபவாசம் செய்கி ன்றேன். தானதர்மங்கள் காணிக்கைகளை செலுத்தி வருகின்றேன். நான் ஒரு பரம்பரைக் கிறிஸ்தவன். இத்தனை வருடங்களாக ஆலயத்திற்கு தவறாமல் செல்கின்றேன். இப்படியாக உங்கள் தகமைகளை கூற முடியுமா? உங்கள் கிரியைகளினாலே நீங் கள் மேன்மை அடைய முடியுமா? கிறிஸ்துவை உண்மையாகவே தன் வாழ்வில் அறிந்த மனிதனானவன், அவருடைய உபதேசத்திலே நிலை த்திருப்பதால், அவன் கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தும், அவர் வழியாக உண்டான கிருபையைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக் குறித்துமே மேன்மை பாராட்டுவான்.

ஜெபம்:

ஜெபம்: என் தேவனாகிய கர்த்தாவே, நான்; உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, நீர் எனக்கு காட்டிவரும் கிருபையை என் வாழ்விலே மேன்மையாக கொண்டிருக்க பிரகாசமுள்ள மனக் கண்களைத் தந்தருள்வீராக.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 18:9-14