தியானம் (ஆனி 04, 2022)
ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம்
ஆதியாகமம் 22:18
உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்
ஆண்டவராகிய இயேசு தாமே, வம்சவரலாற்றின்படியே ஆபிரகாமின் வழி வந்த இஸ்ரவேல் ஜனங்களில் அநேகரை நோக்கி: உங்கள் பிதா ஆபி ரகாம் அல்லவே, என்று கூறியிருக்க, இஸ்ரவேலின் காணியாட்சிக்கு புறம்பாயிருக்கின்ற, புறஜாதிகளாகிய நாம் எப்படி ஆபிரகாமின் ஆசீர்வா தங்களை சுதந்தரித்துக் கொள்ள முடியம்? தேவனாகிய கர்த்தரதாமே, மீட்பராகிய இயேசு இந்த உலகத்திலே வெளிப்படுவதற்கு 42 தலைமு றைகளுக்கு முன்னதாக வாழ்ந்த ஆபிர காமை நோக்கி: உன் சந்ததிக்குள் பூமி யிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக் கப்படும் என்று வாக்குரைத்தார். ஆபிர காமிற்கு அநேக சந்ததிகள் இருந்தது, ஆனால் இங்கே நீங்கள் கவனிக்க வேண் டிய காரியமாவது, உன் சந்ததிக்குள் என்று ஒரு சந்ததியை குறிப்பிட்டிருக்கின்றார். அந்த சந்ததியானது மனிதர்கள் மத்தியிலே வெளிப்படவிருக்கும் தேவனுடைய சந்ததி. அந்த சந்ததியானது, இந்த பூமியிலுள்ள புருஷ சித்தத்தினாலே உண்டான சந் ததி அல்ல. அது உன்னதமான தேவனாலே உண்டாகும் புதிய சந்ததி. ஆபிரகாமிற்கு பின், 42 தலைமுறைகள் கடந்து சென்ற பின்பு, தேவனா கிய கர்த்தர்தாமே, மரியாள் என்னும் கன்னிகையை தெரிந்து கொண்டு, அவளுக்கு தேவ செய்தியை அனுப்பினார். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; என்றான். அத ற்கு மரியாள்: இது எப்படியாகும்? நான் புருஷனை அறியேனே என் றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன் மேல் வரும்; உன்னதமானருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். இந்த புதிய சந்ததி மனிதர்கள் மத்தியிலே தோன்றும் ஆனால், இந்த பூமியிலுள்ள ஒரு புருஷனாலே உண்டாவதில்லை மாறாக தெய்வீக வித்தினால் உண்டான சந்ததி. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே அந்த புதிய சந்ததி (கலாத்தியர் 3:16). உங்களில் கிறிஸ் துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெற்றவ ர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்திருக்கி ன்றீர்கள். ஆதலால் நாம் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், பரிசு த்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறோம். இவ்வண்ணமாக, கிறிஸ்து இயேசு வழியாக நாம் ஆபிரகாமின் சந்த தியும், ஆசீர்வாதத்தின் சுதந்திரருமாக மாற்றப்பட்டிருக்கின்றோம்.
ஜெபம்:
கிறிஸ்துவுக்குள்ளாய் எங்களை முன்குறித்த தேவனே, இந்த பெரிதான பாக்கியத்தின் மேன்மையை எப்போதும் உணர்ந்தவனா(ளா)ய், உம்மிலே நிலைத்த்திருந்து கனிகொடுக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கலாத்தியர் 3:14