புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 02, 2022)

வார்த்தையில் உண்மையுள்ள தேவன்

ஆதியாகமம் 22:12

நீ தேவனுக்குப் பயப்படுகி றவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.


தேவனாகிய கர்த்தர் ஆபிரகாமை அழைத்து, சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்பு, அவருடைய வாக்கின்படி, அவனுக்கும் அவனுடைய மனைவியாகிய சாராளுக்கும், ஒரு ஆண் குழந்தையைக் கொடுத்தார். ஆண்டுகள் கடந்து சென்ற பின்பு, தேவன் ஆபி ரகாமைச் சோதித்தார்; எப்படியெ னில், அவர் அவனை நோக்கி: ஆபி ரகாமே, உன் புத்திரனும் உன் ஏக சுதனும் உன் நேச குமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத் துக் கொண்டு, மோரியா தேசத்துக் குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். ஆபிரகாமோ, தாமதிக்கா மல், அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டு பேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட் டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத் தைக் கண்டான். தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந் தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டை களை அடுக்கி, பலி கொடுக்க ஆயத்தமாகின்ற போது, அப்பொழுது கர்த்தரு டைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே. நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப் புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப் பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். பிரியமானவர்களே, ஆபிரகாமின் விசுவாசத்தை சற்று எண்ணிப் பாருங்கள். அவ்வளவாய், ஆபிரகாம் தேவ னாகிய கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தார். அதனால், ஆபிரகாம், விசுவாசத்தின் தந்தை, தேவனுடைய சிநேகிதன் என்ற பெயர்கள் பெற்று, தேவனருளிய ஆசீர்வாதங்களின் சுதந்திரவாளியானார். ஆபி ரகாம், தேவனுக்கு பயந்து அவருடைய வார்த்தையின் வழியிலே நடப் பவர் என்பதை, தன் வாழ்வில் கிரியைகளின் வழியாக காண்பித்தார். தேவனுக்காக எதையும் இழந்து போவதற்கு ஆயத்தமுள்ளவராக இருந் தார். ஏனெனில், தேவன் வாக்கில் உண்மையுள்ளவரென்றும், தேவன் கூறிய ஆசீர்வாதத்தின் வார்த்தைகளை அவர் எப்படியும் நிறைவேற்று வார் என்பதையும விசுவாசித்திருந்தார். அவரைப் போல நாமும் தேவனுக்கு பயந்து அவருடைய வார்த்தையில் நிலைத்திருப்போமாக.

ஜெபம்:

வாக்குத்தத்தத்தின் சுதந்திரர்களாகுபடி நம்மை அழைத்த தேவனே, என்னுடைய வாழ்க்கையிலே உம்முடைய வாக்கை நான் முழுமையாக விசுவாசித்து, அதைப் பற்றிக் கொண்டிருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - காலத்தியர் 3:6-29