புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 01, 2022)

தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

ஆதியாகமம் 17:1

நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன் பாக நடந்துகொண்டு உத்த மனாயிரு.


மெசொப்பொத்தாமியா நாட்டிலே, எழுபத்தைந்து வயது (75) நிறைந்த ஆபிராம் என்னும் ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய மனைவியின் பெயர் சாராய். அவர்களுக்கு பிள்ளையில்லாதிருந்தது. ஒரு நாள் தேவ னாகிய கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத் தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக் குக் காண் பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாத மாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதி க்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன் னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமி யிலுள்ள வம்சங்களெல்லாம் உனக் குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். எப்படி ஒரு மனிதன், வாக்கை நம்பி தன் ஊரைவிட்டு போக முடியும்? பிள்ளையில்லாதிருக்க, எப்படி ஒருவ னுடைய சந்ததி பெருக முடியும்? இப்படி மனதிலே பல கேள்விகள் எழுந்திருக்கலாம்;. ஆனால் ஆபிராமோ, தேவனுடைய அழைப்பை ஏற் றுக் கொண்டு, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறி யாமல், தேவ வாக்கை நம்பிப் புறப்பட்டுப்போனான். இருபத்துநான்கு ஆண்டுகள் (24) சென்ற பின்பு, ஆபிராமின் தொண்ணூற்றொண்பதாவது (99) வயதிலே. கர்த்தர் மறுபடியும் ஆபிராமோடே பேசினார்: இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளு க்குத் தகப்பனாக ஏற் படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்ன ப்படும் என்றார். கர்த்தர் முன்குறித்த காலம் வந்த போது, ஆபிரகாமிற்கு அவன் மனைவி சாராள் வழியாக ஒரு குமாரனை கொடுத்தார். கர்த்தர் சொன்னதை நிறைவேற்றி ஆபிரகாமை நிறைவாக ஆசீர்வதித்தார். பிரி யமானவர்களே, தேவனாகிய கர்த்தர் தம்முடைய வாக்கிலே உண்மையு ள்ளவர். அவர் உங்களுக்கு சொன்னதை நிச்சயமாக நிறைவேற்றி முடி ப்பார். அவராலே கூடாத காரியம் ஒன்றுமில்லை. ஆனால் நீங்கள் கர்த்தரை நம்பி, இந்த மாயையான உலகத்தின் போக்கையும், உங்கள் மூதாதையரின் வழி வந்த சடங்காச்சாரங்களையும், பாரம்பரியங்ளையும் விட்டு விட்டு, கர்த்தராகிய இயேசுவின் புதிதும் ஜீவனுமான வழியிலே செல்ல ஆயத்தமாக இருக்கின்றீர்களா? நீங்கள் ஆண்டவர் இயேசுவின் அழைப்பை விசுவாசித்தால், சூழ்நிலைகளைப் பார்த்து சோர்ந்து போகாமல், கர்த்தர் முன்குறித்த நாள்வரைக்கும் அவருக்கு முன்பாக உத்தமமாக நடந்து பொறுமையோடு காத்திருங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் எனக்கென முன்குறித்ததை நிறைவேற்றி முடிப்பீர் என்பதை விசுவசிக்கின்றேன். உமக்கு முன்பாக உத்தமமாய் நடக்க என்னை கரம்பிடித்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 19:26