புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 31, 2022)

பிரகாசமுள்ள மனக்கண்கள் வேண்டும்

2 கொரிந்தியர் 4:17

அதிசீக்கிரத்தில் நீங்கும் இலே சான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்கு கிறது.


மோசே எனபவர் எகிப்திலே பிறந்த காலத்திலே, அவருடைய சந்ததியாகிய இஸ்ரவேலர் எகிப்திலே அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருந்தார்கள். அவர்கள் எகிப்தின் ஆளோட்டிகளாலே வாதிக்கப்பட்டு, வெகுவாய் துன் பப்படுத்தப்பட்டு வந்தார்கள். அந்நாட்களிலே, பிறக்கும் ஆண்பிள்ளை களை யெல்லாம் நதியிலே போட்டுவிடப்பட வேண்டும் என்று எகிப்தின் ராஜாவினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மோசேயின் தாயானவள், ஒரு நாணற்பெட்டியை எடு த்து, அதற்குப் பிசினும்கீலும் பூசி, அதிலே பிள்ளையாகிய மோசேயை வளர்த்தி, நதியோரமாய் நாண லுக்குள்ளே வைத்தாள். அப்பொ ழுது பார்வோனு டைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள்;. அவள் அந்த பிள்ளையை கண்டு, இரக்கமுற்று அதை எடுத்து வளர்த்தாள். மோசே பார்வோனின் அரண்ம னையிலே ஒரு இளவரசனைப் போல, சகல வசதிகளோடும் வாழ்ந்து வந்தான். மோசே தான் பெரியவனானபோது, எகிப்தின் அநித்திய மான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும், தற்போதும் பெரும் பாடுகளை அனுவித்து வரும் தன்னுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்ப தையே தெரிந்துகொண்டார். அதாவது, எகிப்தின் பாவ வாழ்வின் முடிவையும், பாடுகளை அனுபவிக்கின்ற தேவ ஜனங்கள் இனிமேல் அடையப் போகும் பலனையும், விசுவாசக் கண்களால் கண்டு, அந்தப் பலன்மேல் அவன் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறி ஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினார். பிரியமானவர்களே, இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது. ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல் லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். நித்தியமான தேவ ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு, அநித்தியமான உலகத்திற்குரியவைகளை விட்டுவிட வேண்டும். இனிவரவிருக்கும் பலனின் மகிமையை உணர்ந்து கொள்ளும்படிக்கு, பிரகாசமுள்ள மனக் கண்களை வாஞ்சியுங்கள். அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்மு டைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை நமக்குத் தரும் நிச்சயத்தோடு முன்னேறுவோமா.

ஜெபம்:

அன்பின் தேவனே, நான் சோர்ந்துபோகாமல், என்னுடைய் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படும்படிக்கு, என்னை உம்முயை வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:19-21