புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 30, 2022)

இனி வெளிப்படும் மகிமை

ரோமர் 8:18

ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.


நான் நல்லவனாக வாழும்படிக்கு பல முயற்சிகளை எடுத்தாலும் இந்த உலகம் என்னை எதிர்த்து நிற்கின்றது. நல்ல மனதோடு மனிதர்களுக்கு நான் நன்மை செய்யும்படி செல்லும் போது, அவர்கள் என்னில் குற்றம் கண்டு பிடிக்கும்படி காரணங்களை தேடுகின்றார்கள். அவர்களோ சுக போகமாக வாழ்ந்து வருகின்றார்கள். நானோ தினமும் நெருக்கப்படுகின் றேன். அவர்கள் சீர்கெட்டுப்போய், அக ந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள். அவர் கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ் தியைப் பெருகப்பண்ணுகிறார்கள். நான் விருதாவா ஏன் என் இருதயத் தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமை யிலே என் கைகளைக் கழுவ வேண் டும். நன்மைக்கு காலமில்லை என்று ஒரு மனிதனானவன், தன் ஆதங்கத்தை, ஒரு தேவ ஊழியரிடம் கூறினான். அத ற்கு அவர் மறுமொழியாக: மகனே, பின்வரும் இரண்டு தெரிவுகளின் ஒன்றை நீ எடுத்துக் கொள்ள வேண்டும். தெரிவு 1: பட்டணத்தின் மை யப் பகுதியில் இருக்கும் ஏழு நட்சத்திர ஹோட்டலிலே, ஒரு கிழமை தங்கியிருந்து, வேண்டியளவு உணவை உண்டு, ஆசை தீருமளவிற்கு குடிவகைகளை அருந்தி, இடாம்பீகரமான குளிரூட்டப் பட்ட அறையிலே இளைப்பாறி, அந்த ஏழு நாட்களும் முடிந்த பின்பு, மிகுதியான வாழ் நாள் முழுவதும், துன்பத்தையும், இன்னல்களையும், இடுக்கண்களை யும் அனுபவிக்க வேண்டும். தெரிவு 2: ஒரு எளிமை யான வீட்டிலே, கஷ;டங்களின் மத்தியிலே நாள்தோறும் உழைத்து, மட்டுப்படுத் தப்பட்ட வருமானத்திலே, ஏழ்மையின் ஆகாரத்தை உண்டு, உஷ;ணமான நாட் களிலே உன் அறையிலே படுத்துறங்கி ஏழு நாட்களை கஷ;ட த்தோடு கழித்த பின்பு, மிகுதியான நாட்கள் முழுவதையும், நிறைவான ஆசீர்வா தங்களோடு மகிழ்சியாக வாழ முடியும். இவைகளில்; எதை நீ தெரிந்து கொள்வாய் என்று கேட்டார். அதற்கு அந்த மனிதனாவன்: ஏழு நாள் கஷ;டப்பட்டாலும், மிகுதியான வாழ்நாட்களை மகிழ்ச்சியாக கழிப்ப தையே விரும்புகின்றேன் என்றார். மகனே, உன் வாழ்நாட்கள் ஒரு புகை யைப் போல சீக்கிரமாய் கடந்து போகும். அநித்தியமான இந்த உல கின் சுகபோகங்களை நீ அனுபவித்து பின்பு, நீ நித்திய ஆக்கினை க்குள் பிரவேசிப்பது பரிதாபம். எனவே, கொஞ்சக் காலம், இந்தப் பூமி யிலே பாடுகளை அனுபவிக்கின்ற நாம், நாட்கள் நிறைவேறும் போது பரமன் இயேசுவோடு பரலோக வீட்டிலே நித்தியமாய் சுகித்திருப்போம். நீ அதையே தெரிந்துகொள் என்றார்.

ஜெபம்:

கிறிஸ்துவுக்குள் உடன் சுதந்திராக அழைத்த தேவனேஇ இனி வரவிருக்கும் நிகரற்ற மகிமையை நம்பியிருக்கின்ற நாம்இ அது வருகிற தற்குப் பொறுமையோடே காத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 73:1-28