புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 29, 2022)

இரண்டு ராஜ்யங்கள்

கொலோ 1:13

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.


திவ்விய ஒளியின் ராஜ்யமும், அந்தகார இருளின் ராஜ்யமுமாகிய இர ண்டு ராஜ்யங்கள் உண்டு. திவ்விய ஒளியின் ராஜ்யத்தின் எஜமான னாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இருக்கின்றார். அந்தகார இரு ளின் அதிகாரத்திற்கு உட்பட்ட ராஜ்யத்தின் எஜமானனாக பொல்லா ங்க னாகிய பிசாசானவன் இருக்கின்றான். மனிதனானவனுக்கு இந்தப் பூமியிலே கொடுக்கப்பட்டிக்கும் குறு கிய வாழ்நாட்களிலே அவன் எந்த ராஜ் யத்தில் நித்திய நித்தியமாய் வாழப் போகின்றான் என்பதை அவனே தெரிந்து கொள்ள வேண்டும். இருமன முள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலை யற்றவனாயிருக்கிறான் (யாக் 1:8). அப்படிப்பட்டவன், காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப் பா யிருக்கிறான். அப்படிப்பட்ட மனு ஷன் திவ்விய ஒளியின் பரலோக ராஜ்யத் திற்கு உட்பட்டவன் அல்ல. இன்றைய உலகிலே, பல நாடுகளிலே, இருளின் அதிகாரத்திற்கு உட்பட்ட பாவங் களை துணிகரமாகவும், வெளியரங்கமாகவும் நிறைவேற்றும்படிக்கு நாட்டில் சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றார்கள். இவர்கள் தங்க ளுக்கென்று ஆலயங்களையும், ஊழியர்களையும் ஏற்படுத்தி, தாங்கள் திவ்விய ஒளியின் தேவ ராஜ்யத்திற்கு உட்பட்டவர்கள் என்று கூறிக்கொ ள்கின்றார்கள். அதாவது, இவர்கள் தங்கள் பாவ இச்சைகளை மனப் பூர்வமாக நிறைவேற்றுகின்றவர்களாகவும், தங்கள் பாவங்களை சுட்டிக் காட்டும் நீதியுள்ள தேவ தாசர்களை எதிர்த்து, அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்கின்றவர்களாகவும் வாழ்ந்து வருகின்றார் கள். பிரியமானவர்களே, மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவி னாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.இது கடைசிக்காலமாயிருக்கிறது. அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அந்திக்கிறிஸ்வின் ஆவி கிரியை செய்து வருகின்றது. எனவே, இருமனமுள்ளவர்களைக் குறித்து ஆச்ச ரியப்படாமல், நாம் திவ்விய ஒளியின் பிள்ளைகளாக பரிசுத்தத்தை காத்துக் கொள்வோமாக. உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் திவ்விய ஒளியின் ராஜ்யத்தில் நிலைத்திருப்பான்.

ஜெபம்:

ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, என்னைத் தகுதியுள்ளவனாக்கிய தேவனே, பரிசுத்த வாழ்க்கையை நான் காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 5:16-18