புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 28, 2022)

கொடுக்கிறதே பாக்கியம்

யோபு 42:2

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.


சேனைகளின் கர்த்தர் நிர்ணயித்திருப்பதை வியர்த்தமாக்குகிறவன் யார்? அவருடைய கை நீட்டப்படும்போது யார் அதைத் திருப்புவான்? தேவன் செய்ய நினைத்த காரியம் நிறைவேறும். ஒருவேளை நீங்களும் நானும் அதற்கு ஆதரவாக இருக்கலாம் அல்லது எதிர்த்து நிற்கலாம். மனிதர்கள் அதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது ஏற்றுக் கொள்ளாது விடலாம். யார், எப்படி, எதைச் செய் தாலும், தேவன் செய்ய நினைத்ததை ஒருவனும் தடுத்து நிறுத்த முடியாது. உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம் முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமா னமானவர் எவருமில்லை. தமக்கு கீழ்ப டிகின்ற சிறியவர்களை புழுதியிலிரு ந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப் பையிலிருந்து உயர்த்த வல்லவராகி ருக்கின்றார். அவருடைய ஆளுகைக்கு முடிவில்லை. தேவன் தம்முடையவர்களை போஷpக்க அறிந்திருக்கின் றார். அதற்கு நாம் நம் இருதயத்தைத் திறந்து, தேவன் தம்முடையவர் களை போஷpப்பதற்கு நம்மை நாம் ஒரு கருவியாக அவருக்கு ஒப்புக் கொடுக்கலாம். அப்படி செய்வது நம்முடைய பாக்கியம். ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும். ஒருவனிடம் திராணியிருந்தும், தேவ னுடைய பணிக்கு ஆதரவாக இருக்காதபடிக்கு தன் இதயக் கதவை அவன் அடைத்தால், சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும். ஆண்டவருடைய நாளிலே அவனவன் கிரி யைகளுக்குரிய தக்க பலனை அடைந்து கொள்வார்கள். கடைசி நாளிலே, தேவ சித்த த்தை செய்தவர்கள் நித்தியஜீவனுக்கும், வேறு சிலர் நித்திய நிந்தை க்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். இந்நாட்களிலே, ஆண் டவர் இயேசுவின் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையா வது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவி யையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்து போன வன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனை யும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;. பிரியமானவர்களே, பிரயாசப்பட்டு, பல வீனரைத் தாங்குங்கள். நற்செய்தி பணிக்கு உதவி செய்யுங்கள். வாங் குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை எப்போதும் நினைத்துக் கொள்ளுங் கள். அவர் சொன்னதை அவர் செய்து முடிப்பார்.

ஜெபம்:

பராக்கிரமமுள்ள தேவனே, கிறிஸ்துவுக்காய் இழந்தவர்கள் தரித்திரரானதில்லை, அவருடைய ராஜ்ய மேன்மைக்காய் கஷ்டப்பட்டோர் நஷ்டப்பட்டதில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - அப்போஸ்தலர் 20:35