புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 27, 2022)

நஷ்டங்களை சகித்துக் கொள்ளுங்கள்

1 பேதுரு 2:20

நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்.


தேவ ஊழியராகிய பவுல் என்பவர், கொரிந்து பட்டணத்திலுள்ள சபை யின் விசுவாசிகளுக்கு, தன் ஊழிய பாதையிலே தனக்கு ஏற்பட்ட நஷ; டங்களை குறித்து கூறும் போது: நான் அதிகமாய்ப் பிரயாசப்பட் டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்ப ட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்று குறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன்;. மூன்றுதரம் மிலா றுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல் லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற் சேதத்தில் இருந்தேன், கட லிலே ஒரு இராப்பகல் முழுவ தும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுக ளால் வந்த மோசங்களிலும், கள் ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோச ங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வரு த்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந் தேன் என்று கூறியிருக்கின்றார். இவைகளை குறித்து அவர் துக்கமடை யாமல், எல்லா உபத்திரவங்கள் மத்தியிலும், என்னைப் பெலப்படுத் துகின்ற கிறிஸ்து இயேசுவால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு ஆற் றல் உண்டு என்று ஆண்டவராகிய இயேசுவின் சிலுவையைக் குறித் தும், தனக்குண்டான தேவ கிருபையைக் குறித்தும் மேன்மைபாராட் டினார். இன்று நாமும் இப்படிப்பட்ட பாடுகளை பட வேண்டும் என்பது பொருளல்ல. தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்த மானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே கிறிஸ்தவ வாழ்வின் மேன் மையாக இருக்கின்றது. ஆனால், இன்று கிறிஸ்துவின் பணிக்காக உதவி செய்பவர்கள், கிறிஸ்துவினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண் டானவுடனே இடறலடைந்து, தாங்கள் கிறிஸ்துவுக்கென்று தங்களால் கொடுத்தவைகளiயும், செய்தவைகளையும் குறித்து வீண் என்று எண் ணிவிடுகின்றார்கள். பல நாடுகளிலே, அநேகர் உபத்திவரங்கள், துன்ப ங்கள், பாடுகள், நிந்தைகள், அவமானங்கள் மத்தியிலும் தமக்குண்டான நஷ;டங் களை சகித்துக் கொண்டு, கிறிஸ்துவுக்காக வாழ்கின்றார்கள். அவர்களு க்கு உங்கள் உதவிக் கரங்களை தாராளமாக நீட்டுங்கள்.

ஜெபம்:

நித்திய வாழ்வுக்கு என்னை அழைத்த தேவனே, உம்முடைய பணியிலே எனக்கு பொருளாதார நஷ்டங்கள் ஏற்பட்டாலும், கொடுக்கும் திவ்விய சுபாவத்தை நான் விட்டுவிடாதிருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:12-13