புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 25, 2022)

ஒரே நகரத்தார்

எபேசியர் 2:19

பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,


இந்த உலகத்திலே அநியாயங்களும் அக்கிரமங்களும் நிறைந்திருக்கின் றது. திருட வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் எங்கிருந்தாலும் அவ ர்கள் திருட்டுத்தனமுள்ளவர்களாகவே இருப்பார்கள். கேட்டின் மகனான யூதாஸ்காரியோத்தின் கண்கள் எப்போதும் பணப்பையின் மேலேயே இரு ந்தது. அதனால் அவன் முடிவிலே தன் ஆண்டவராகிய இயேசுவுக்கு ஒரு விலையை போட்டுக் கொண் டான். அது அவனுக்கு கண்ணியாக வந்ததால், தன் பொருளாசையி னாலே தன் உயிரைத் தானே மாய் த்துக் கொண்டான். ஆனால் ஆண்ட வராகிய இயேசுவின் மற்றய சீஷர் கள் யாவரும், தங்களை அழை த்த ஆண்டவருக்கு விசுவாசமுள்ளவர்களாக தங்களை அர்ப்பணித்து, தேவனு டைய சேவையின் பாதையிலே இரத்த சாட்சிகளாக மரித்தார்கள். இன் றைய நாளிலே யூதாசைப் போல அங்காங்கே இருக்கும் ஒரு சிலரால், நாம் நம்முடைய விளக்கைக் கொழுத்தி மரக்காலினால் மூடி வைக்கக் கூடாது. இந்தப் பூமிக்கு உப்பாகவும், உலகத்திற்கு வெளிச்சமாகவும் நாம் இருக்கும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றோம். எனவே, ஆண்டவர் இயேசுவின் விசுவாசமுள்ள மற்றய சீஷர்களைப் போல, தங்களை அர் ப்பணித்து ஊழியம் செய்யும் தேவ ஊழியர்களுக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும். வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத் திரனாயிருக்கிறான். தேவ ஊழியர்களுக்காக நாம் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். நீங்கள் செல்லும் சபையையும், அதன் ஊழியத்தையும் தாங்க வேண்டும். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாய மாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கி றவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். சீஷன் என்னும் நாமத்தினி மித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையா மற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். பலனை அடையும்படிக்காக அல்ல, நாம் தேவனு டைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே. நாம் தேவனு டைய வீட்டார். அவருடைய பிள்ளைகள். எனவே, உங்கள் சுதந்திரத் திலே பங்காளிகளாக இருங்கள். தேவனுடைய வீட்டின் நன் மைகளை புசிக்கும் நாம், சமநிலைப்பிரமாணத்தின்படி அதை பகிர்ந்து கொடுக்கும் நல்ல உக்கிராணக்காரனாக இருக்க வேண்டும். எனவே, நீங் கள் செல்லும் சபையின் வழியாக தேவனுடைய ஊழியங்களைத் தாங்குங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த உலகத்தின் ஆளுகைக்குள் நான் சிக்கிவிடாதபடிக்கு எப்போதும் உம்முடைய ஆளுகைக்குள் இருந்து உம்முடைய ஆலோசனையின்படி வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:18