புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 24, 2022)

இலவசமாய்க் கொடுங்கள்

மத்தேயு 10:8

இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.


ஒரு சிறிய கிராமத்திலே சேவை புரிந்து வந்த ஊர் மருத்துவரொருவர், தன்னிடம் வரும் நோயாளிகளைப் பார்த்து, முதலாவதாக, அவர் கேட் கும் கேள்வி: பணம் வைத்திருக்கின்றீர்களா? இங்கே கடனுக்கு இடமி ல்லை, செலவும் இவ்வளவாகும் என்றும் கூறிக் கொள்வார். எப்படிப் பட்ட கடும் நோயானாலும், நோயாளிகள் ஏழை எளியவர்களாக இருந்தாலும், முதலாவதாக அந்த ஊர் மருத்துவரானவர் தன் பணப் பையை நிறைப்பதைக் குறித்தே மிகவும் கவ னமுள்ளவராக இருந்ததால், அவ்வூ ரிலிருந்த ஏழை எளியவர்கள், கடும் நோயினால் மரிக்கும் தருவாயிலும், இலவச மருத்துவத்தை பெற்றுக் கொள்ளும்படிக்கு, பல மைல்களுக்கப்பால் இருக்கும் அரச மருத்துவ மனைக்கு கால்நடையாக, பல மணித்தியாலங்கள் பிரயாணப்பட்டு வந்தார்கள். பொதுவாக எல்லா மருத்துவர்களும், முதலாவதாக உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும், இரக்கமும் உள்ளவர்களாக இருந்தபோதிலும், இப்படிப்பட்ட ஒரு சிலரும் இந்தப் பூமியிலே இருக் கத்தான் செய்கின்றார்கள். ஒரு சமயம், ஆண்டவராகிய இயேசு, தம்மு டைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். இந்தப் பன்னிருவரையும் இஸ்ரவேல் ஜனங்களிடத்திலே அவர் அனுப்புகையில், 'பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். வியாதியுள்ளவர்க ளைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற் றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்' என்று கட்டளையிட்டார். உண்மையுள்ள இருதயத்தோடு தேவ ஊழியத்தை செய்யும் தாசர்கள் பலர் இந்த பூமியிலே இருக்கின்ற போதிலும், இன்று அங்காங்கே, ஒரு சிலர் கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத் தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிறார்கள். இப்படி ப்பட்டவர்கள், அந்த ஊர் மருத்துவரைப்போல, தங்கள் பணப்பையைக் குறித்தே மிகவும் கவனமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் காணிக்கை எவ்வளவு அதிகமோ, அவ்வளவு அதிகமாக உங்களுக்கு பலன் கிடைக்கும் என்பார்கள். கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கின்றவர்கள் தோன்றுவார்கள். அவர் களுடைய கனிகளாலே அவர்களை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் இலவசமாக பெற்ற திவ்விய ஆசீர்வாதங்களை இலவசமாகவே கொடுங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, இந்த உலகத்திலே தோன்றியிருக்கும் பொல்லாத ஆவிகளை நிதானித்து அறியும்டிக்கு எனக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்து உம்முடைய தூய வழியிலே நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யூதா 1:20-25