புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 22, 2022)

திருக்கரத்தின் கருவிகள்

மத்தேயு 6:4

அப்பொழுது அந்தரங்கத் தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியர ங்கமாய்ப் பலனளிப்பார்.


பிரியமானவர்களே, நாம் செய்யும் நற்கிரியைகள் யாவும், தேவனுக்கு உகந்த வாசனையாக இருக்க வேண்டும் என்பதைக் குறித்து நாம் கட ந்த நாட்களிலே தியானித்து வந்தோம். அழியாத ராஜ்யத்திலே நாம் எப் படியாக முதலீடு செய்ய வேண்டும். தேவன் கொடுத்த பெலத்தின்படி, திக்கற்ற பிள்ளைகள், ஏழை எளியவர்கள், விதவைகள் படும் உபத்திர வத்திலே நாம் நிச்சயமாக அவர்களை விசாரிக்க வேண்டும். தேவ ஊழியத்தி ற்கு ஆதரவாக இருக்க வேண்டும். நம் முடைய அழைப்பையும் தெரிந்து கொள் ளுதலையும் நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவை யாவும், கிறிஸ்து இயேசு வழியாக நம்மைக் குறித்த பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற் குள் அடங்கி இருக்க வேண்டும். இன் னுமொரு விதமாக இதை கூற வேண்டுமானால், அனுதினமும் வேத த்தை தியானிக்காமல், தேவனுடைய சமுகத்திலே ஜெபம் செய்யாமல், தேவனோடு கொண்டுள்ள உறவிலே வளராமல், நான் தானதர்மங்களை மட்டும் செய்து கொண்டிருப்பபேன் என்று ஒரு மனிதனானவன் எண் ணுவானானால், அவனுடைய பிரயாசம் யாவும் இந்தப் பூமிக்குரிய தாகவே இருக்கும். இறுதியாக, மனுஷர் காணவேண்டுமென்று அவர்க ளுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையா யிருங்கள்;. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயி ருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். இதன் கருப்பொருள் என்ன? நாம் தானதர்மங்களை செய்யும்போது, அதை பெற்றுக் கொண்டவர்களை நாம் பயமுறுத்தி நீ இதை யாருக்கும் சொல்லக்கூடாது என்று அவர்களை அடக்கி வைப்பது என்பது பொருளல்ல. மாறாக, நம்முடைய இருதயமானது, மனுஷரால் உண்டாகும் புகழ்ச்சியை நாடாமல், நற்கிரியைகளை செய்வதற்கு தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய் கையையும் என்னில் உண்டாக்குகின்றார் என்ற சிந்தையை தரித்தவர் களாக இருக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசுவின் திருக்கரத்தின் கருவிகளாக நாம் இருக்கின்றோம். அப்பிரயோஜமான மனிதர்களாகிய நம்மை, பயனுள்ள கருவிகளாக அவர் நம்மை பயன்படுத்து வதையிட்டு நம் உள்ளத்திலே நன்றி பெருக வேண்டும். அப்போது, நம் பிதாவாகிய தேவனால் உண்டாகும் விண் கைமாறு மிகுதியாக இருக்கும்.

ஜெபம்:

உம்முடைய பிள்ளையாக என்னை தெரிந்து கொண்ட தேவனே, இந்த பூமியிலே வாழும் நாட்களிலே, தாழ்மையுள்ள இருதயத்தோடு உம்முடைய சித்தத்தை நிறைவேற்றி முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 19:17